உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக முதல்வரை எதிர்த்து மைசூரு பாதயாத்திரை துவக்கம்

கர்நாடக முதல்வரை எதிர்த்து மைசூரு பாதயாத்திரை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'மூடா' முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து மைசூரு வரையிலான பாதயாத்திரையை, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் நேற்று துவக்கினர்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரது மனைவி பார்வதிக்கு, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 மனைகளை ஒதுக்கியது.சமூக ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு முதல்வருக்கு, கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை திரும்பப் பெறும்படி கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் மூடா முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மைசூரு வரை பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.இதன்படி, பெங்களூரு கெம்பம்மா கோவிலில் இரு கட்சித் தலைவர்களும் நேற்று காலை பூஜை செய்தனர். பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மேடையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சருமான குமாரசாமி ஆகியோர் முரசு கொட்டி பாதயாத்திரையை துவக்கி வைத்தனர்.மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, சோமண்ணா, ஷோபா, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.வழி நெடுகிலும் முதல்வருக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசை கண்டித்தும் பதாகைகளை கைகளில் ஏந்தி யும், கோஷங்கள் எழுப்பியவாறும் நடந்தனர். இந்த பாதயாத்திரையை வரும் 10ம் தேதி மைசூரில் நிறைவு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramona
ஆக 04, 2024 09:07

முன்பு சுப்ரீம் கோர்ட் என்றால் பயம் இருக்கும், இங்கு போனால் உண்மை நிச்சயமாக வெளி வரும்,தண்டனை யிலிருந்து தப்பிக்க முடியாத என்றஅளவுக்கு பயம் இருந்தது, இப்போது இருக்கும் மனநிலை, என்ன மிதமிஞ்சி போனா சுப்ரீம் கோர்ட்டுக்கு போவாங்க அங்கே நாம பார்த்துக்கலாம் என்று ஆகிவிட்டது, இதை மாற்றுவது ரொம்பவும் கடினம். சாதாரண மனிதனுக்கு உண்மையான கேசாக இருந்தாலும், நீதி அவ்வளவு சீக்கிரம் கிடைக்க வாய்ப்பில்லை, இதே அரசியல் ஆசான்கள் பிரபலங்கள், வசதி, சக்திமிக்கவர்கள் ,கேட்டால் கேட்டவர்களுக்கு அது எளிதில் கிடைத்து விடுகிறது...


Kasimani Baskaran
ஆக 04, 2024 06:43

நினைத்துப்பார்க்காக அளவுக்கு பல மனைகளை அமுக்கிய முதல்வர் குளாம் மீது உச்சநீதிமன்றத்தில் அவசரமாக மனுக்கொடுத்து அதை வைத்து உடனே தண்டனையை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்தால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. உச்ச பஞ்சாயத்தை நினைத்தால் குலை நடுங்குகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை