| ADDED : மே 24, 2024 12:59 AM
இவர்கள் தான் ஓட்டு வங்கி!ராகுலும், அகிலேஷும் தங்களின் ஓட்டு வங்கிக்காக ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணித்தனர். நம் நாட்டிற்குள் ஊடுருவியவர்கள் தான், அவர்களின் ஓட்டு வங்கி. அதை இழந்துவிடுவோம் என கும்பாபிஷேகத்துக்கு வரவில்லை. அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,முக்கியமான தேர்தல்!நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றும் தேர்தல் இது. வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு பிரச்னைகளுக்கு எதிரான போராட்டம் இந்த தேர்தல். இதை உணர்ந்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும். சோனியாமுன்னாள் தலைவர், காங்கிரஸ்அடி விழுந்துள்ளது!மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள், வங்க தேசத்தவர்கள், ரோஹிங்கியாக்கள் ஆகியோருக்கும் முதல்வர் மம்தா ஓ.பி.சி., சான்றிதழ் தந்துள்ளார். அதை நீக்கிய கோல்கட்டா உயர் நீதிமன்ற முடிவு, மம்தாவின் ஓட்டு வங்கி அரசியலுக்கு விழுந்த பெருத்த அடி.சிவ்ராஜ் சிங் சவுகான்ம.பி., முன்னாள் முதல்வர், பா.ஜ.,