உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

எதுவும் செய்யாத அரசு!ஹிமாச்சல் மாநிலத்தில் வெள்ளத்தால் பலர் தங்கள் குடும்பங்களை இழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு காங்., தலைமையிலான மாநில அரசின் அமைச்சர்கள் எதுவும் செய்யவில்லை. உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு இழப்பீடுகளை வழங்க வேண்டும். மத்திய அரசு விரைவில் நிதி வழங்கும். கங்கனாலோக்சபா எம்.பி., - பா.ஜ.,யாருக்காக இந்த பட்ஜெட்? இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் 31 சதவீதம். ஏழைகள் 60 - -65 சதவீதம் உள்ளனர். இந்த பட்ஜெட் இரு பிரிவு மக்களின் தேவைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை. பிறகு யாருக்கு இந்த பட்ஜெட்? ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது. மஹுவா மொய்த்ராலோக்சபா எம்.பி., - திரிணமுல்ராகுல் ஒரு துறவி!ராகுலின் ஜாதி பற்றி அனுராக் தாக்குர் கூறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். ஜாதி குறித்த அவரது கருத்து தவறு. ராகுல் தன்னை ஜாதியற்றவர் என்கிறார். அப்படி என்றால் அவர் ஒரு துறவி. அவரைப் போல் நாட்டில் பலர் உள்ளனர். அவர்கள் எப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பில் பங்கேற்பர். காங்கிரஸ் தான் விளக்க வேண்டும். நிஷிகாந்த் துபேலோக்சபா எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
ஆக 08, 2024 09:03

ஆமா நீங்க சொன்னா சரியா இருக்கும். அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த 31% நடுத்தர வர்க்கமும் 65% ஏழைகளும் சந்தித்து எதையுமே கேட்டு பெற முடிவதில்லை... யாருக்காகவோ தான் இந்த உறுப்பினர்கள் இருக்கிறாங்க போல இருக்குது.. அவங்க யார காப்பாத்துறாங்க? எப்பவுமே ஞாயத்துக்காக குரல் கொடுக்கிற நீங்கதான் இந்த நிலைமையை மாற்றி நம்ம நாட்டை காப்பாத்தணும் அம்மா


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ