உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறார் நவீன் பட்நாயக்: பா.ஜ., முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறார் நவீன் பட்நாயக்: பா.ஜ., முன்னிலை

புவனேஸ்வர்: ஒடிசாவில் 175 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதியில் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி 53 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், நவீன் பட்நாயக் ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி வருகிறது. தொடர்ந்து 5 முறை முதல்வர் ஆக நவீன் பட்நாயக் பதவி வகித்துள்ளார். ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடந்தது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 147 தொகுதிகளிலும், பா.ஜ., 147 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும் போட்டியிட்டன. 63.46 சதவீத ஓட்டுகள் பதிவாகின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5bnjyfmc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 04) நடந்து வருகிறது. ஒரு கட்சி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தற்போது நிலவரப்படி,

பா.ஜ.,- 78 தொகுதிகள்பிஜூ ஜனதா தளம்- 53 தொகுதிகள்.காங்கிரஸ்- 14 தொகுதிகள்,மற்றவை- 2 தொகுதிகள்.

2019ல்...!

கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ., 23 தொகுதிகளை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jai
ஜூன் 04, 2024 20:57

அங்கு BJPயும் BJDயும் ஒரு எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். நாட்டிற்கு எதிராகவோ இந்து மதத்திற்கு எதிராகவோ பேசாதவர்கள். BJD INDI கூட்டணியில் சேரவில்லை. இப்பவும் தேவைப்பட்டால் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். 25 ஆண்டு ஆண்ட கட்சிக்கு இது தோல்வியும் அல்ல. திம்கா இதுவரை இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததில்லை.


ஆரூர் ரங்
ஜூன் 04, 2024 19:14

நல்லாயிருந்த நவீன்...பாண்டியனால் போண்டி.


s vinayak
ஜூன் 04, 2024 16:01

vk பாண்டியனை கட்சியில் முன்னிறுத்தியதால் வந்த வினை. பூரி ஜகந்நாதரின் கருவூல சாவி பற்றிய உண்மையை விளக்க தவறியதன் விளைவு.


raja
ஜூன் 04, 2024 14:19

தமிழர்கள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும் அவர்களை ஆள ஒரு தமிழனை அனுமதிக்க வில்லை... ஆனால் தமிழன் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்டத்துக்கு மீண்டும் ஆதரவு வெக்ககேடு....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை