வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இங்கெல்லாம் என்கவுண்டர் வேலை செய்யாது
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
பந்தலுார்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முகாமிட்டிருந்த நக்சல் மனோஜ், எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நச்சல்கள் மொய்தீன், சோமன், மனோஜ் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர், கடந்த சில மாதங்களாக முகாமிட்டு, மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் சமயத்தில் நக்சல் மனோஜ் மற்றும் மொய்தீன் ஆகியோர், எஸ்டேட் தொழிலாளர்களிடம் வந்து, 'தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடக்கூடாது; தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்' என்று பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வயநாடு தலப்புழா பகுதியில் அண்மையில், நக்சல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மேலும், அதை ஒட்டிய வனத்தில் நக்சல்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போலீசாரால் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.இந்நிலையில், நேற்று மனோஜ், 32, எர்ணாகுளத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்கு சென்ற போது, போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இங்கெல்லாம் என்கவுண்டர் வேலை செய்யாது
1 hour(s) ago