மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
புதுடில்லி, இளங்கலை படிப்புகளுக்கான 'க்யூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, பல்கலை மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, 'நீட், நெட்' உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.நாடு முழுதும் உள்ள பல்கலைகள், அதன் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு, என்.டி.ஏ.,வால் 2022 முதல் நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான தேர்வு கடந்த மே 15, 16, 17, 18, 21, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்தன. மொத்தமுள்ள 63 பாடங்களில், 15 பாடங்களுக்கு பேனா - பேப்பர் முறையிலும்; 48 பாடங்களுக்கு கணினி அடிப்படையிலும் தேர்வு நடந்தன.நாடு முழுதும் 379 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 26 நகரங்களிலும் க்யூட் தேர்வு நடந்தது. மொத்தம் 13.5 லட்சம் தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகளை கடந்த 30ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.இருப்பினும், க்யூட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.என்.டி.ஏ.,வால் நடத்தப்பட்ட நீட் மற்றும் நெட் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் அவை தொடர்பான விசாரணை காரணமாகவே இந்த தாமதம் நிலவியதாக கூறப்பட்டது.இந்நிலையில், இது குறித்து யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் நேற்று கூறுகையில், ''இளங்கலை படிப்புகளுக்காக நடத்தப்பட்ட க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிடும் பணியில் தேசிய தேர்வு முகமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.''முடிவுகள் வெளியாகும் தேதியை என்.டி.ஏ., விரைவில் அறிவிக்கும்,'' என்றார்.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago