உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பல் வன்முறையால் 650 பேர் பலி: கலங்க வைக்குது ஐ.நா., ரிப்போர்ட்

கும்பல் வன்முறையால் 650 பேர் பலி: கலங்க வைக்குது ஐ.நா., ரிப்போர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் 650 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.,., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு அமைந்துள்ளது.

விசாரணை

ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள், கலவரம் குறித்து ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் 10 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஜூலை 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 400 பேரும், ஆகஸ்ட் 5,6ம் தேதிகளில் 250 பேரும் உயிரிழந்துள்ளனர். கைது, உயிர் பலி குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு

ஆகஸ்ட் 15ம் தேதி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த முன்னாள் பிரதமரின் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களை மூங்கில் குச்சிகள், இரும்பு கம்பிகள் மற்றும் குழாய்களுடன் ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பு, வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களைத் தடுக்க அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தில் இருக்கும் மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Duruvesan
ஆக 18, 2024 13:27

இங்கயும் இவனுங்க ஹிந்துக்கள் தான் அதிகம் பாதிப்பு அடைந்தார்களேனு சொல்ல மாட்டானுக, ஆனால் இந்தியாவில் மூர்கனுக்கு பாதுகாப்பு இல்லைனு உருட்டுவாங்க


Venkatesan Srinivasan
ஆக 18, 2024 13:12

உண்மையில் வங்க தேசத்தில் நடந்தது சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான பெரும்பான்மை முஸ்லீம்கள் நடத்திய மதக் கலவரம். மாணவர்கள் போராட்டம் என்ற போர்வையில்.


Ramesh Sargam
ஆக 18, 2024 12:20

650 பேர் அடித்துக்கொண்டு சாகும் வரையில் அந்த நாட்டு காவல்துறை, ராணுவம் என்ன செய்துகொண்டிருந்தது? கலவரக்காரர்களை அடக்கமுடியாத போலீசும், ராணுவமும் அந்நாட்டுக்கு தேவையா? கையாலாகாதவர்கள்.


KRISHNAN R
ஆக 18, 2024 11:54

அப்படி சொல்லாதீங்க... மேற்கு வங்காளம்...... ரொம்ப வருத்தப்படும்


rasaa
ஆக 18, 2024 11:42

சோத்துக்கு வழியில்லை. போறாடுகிறார்கள் வெட்கமில்லாமல். பிழைக்க வழி தேடி திருட்டுத்தனமாக இந்தியா வரும் வந்தேரிகள்.


N.Purushothaman
ஆக 18, 2024 13:41

பாகிஸ்தான் இப்போது அந்நாட்டு பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளை மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு அனுப்புகிறார்கள் ....அவர்களை பார்த்தால் பாவமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது ... குழந்தைகளை மடியில் வைத்து கொண்டு பிட்சை எடுத்து கொண்டு இருக்கிறார்கள் ...வேறு மொழியும் தெரியாது ...இதற்க்கு காரணம் அந்நாட்டு ராணுவத்திற்கு அதீத அதிகாரம் கொடுத்து அவர்கள் எப்போதும் இந்தியாவை பற்றியே சிந்தித்தும் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதிலேயுமே முனைப்பு காட்டுகிறார்கள் ..நாட்டு மக்கள் எப்படி போனாலும் என்ன ஆனாலும் கவலை இல்லை ...


N.Purushothaman
ஆக 18, 2024 11:34

இந்த வன்முறையோட நோக்கமே மதக்கலவரத்த கொண்டு வருவது தான் ....


N.Purushothaman
ஆக 18, 2024 11:15

உலகெங்கிலும் அந்த மதத்தின் மீது மக்கள் கடும் கோவத்தில் இருக்கின்றனர் ... இதனால் மதத்தில் இருக்கும் நல்ல நேர்மையான வன்முறையை நிராகரிக்கிற மக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் ...


மேலும் செய்திகள்