உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு: பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீட் தேர்வு முறைகேடு: பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஜூன் 20) நீதிபதி விக்ரம்நாத் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: தற்போது மறுத்தேர்வு எழுத உள்ள 1563 மாணவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை ஜூலை 8க்குள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மீதான விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Narayanan Muthu
ஜூன் 20, 2024 20:02

நான் அடிக்கிற மாதிரி அடிப்பேனாம். நீ அழுவது போல் நடிப்பாயாம் . நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்


Mohan
ஜூன் 20, 2024 15:46

Modi government has to take action on the complaints/ reports. Why the government hides its inefficiency, and why the situation was made for Supreme court to interfere everytime.


Sree
ஜூன் 20, 2024 19:15

சில முட்டாள்களின் பணத்திற்கு இது போல் வேலை செய்கின்றனர் குற்றவாளிக்கு சிறை தண்டனை கொடுத்தாலும் இதே மூத்திர மன்ற அநீதிபதி பணத்திற்கு தண்டனை நிறுத்தி வைப்பார் தேவையான வழக்கு விசாரணை காலதாமதமாகவும் தேவையற்ற வழக்குகள் உடனடியாக விசாரிப்பது மன்ற கடமையாக செய்கிறார்கள்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ