உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடற்படைக்கு புதிய தளபதி

கடற்படைக்கு புதிய தளபதி

புதுடில்லி, இந்திய கடற்படையின் புதிய தளபதியாக, தற்போதைய துணை தளபதி தினேஷ் குமார் திரிபாதி, 60, இந்த மாத இறுதியில் பதவி ஏற்க உள்ளார். நம் நாட்டின் முப்படைகளில் ஒன்றான கடற்படையின் தளபதி ஹரிகுமாரின் பதவிக்காலம், வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, நம் கடற்படையின் புதிய தளபதியாக, துணை அட்மிரலாக உள்ள தினேஷ் குமார் திரிபாதி பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நம் கடற்படையின் துணை தளபதியான தினேஷ் குமார் திரிபாதி, புதிய தளபதியாக வரும் 30ம் தேதி பிற்பகல் முதல் பொறுப்பேற்க உள்ளார்' என, குறிப்பிட்டுள்ளது.இவர், இந்திய கடற்படையில் 1985ல் பணியில் சேர்ந்தார். கடந்த 39 ஆண்டு களுக்கும் மேலாக கடற்படையில் பணியாற்றி வரும் தினேஷ் குமார் திரிபாதி, கமாண்டர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, ஐ.என்.எஸ்., வினாஸ் போர்க்கப்பலை திறம்பட கையாண்டுள்ளார். மேற்கு கடற்படை பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். இவரது சேவையை பாராட்டும் வகையில், அதி வசிஷ்ட சேவா விருது மற்றும் நவ சேனா பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை