மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1
பெங்களூரு, : வானிலையை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை செய்வதற்காக இந்த ஆண்டுக்குள் பெங்களூரில் 'நவீன டாப்ளர் ரேடார்' பொருத்தப்பட உள்ளது.கர்நாடக வானிலையை பொறுத்தவரையில், வானிலை ஆய்வில் தனக்கென கண்காணிப்பு ரேடார் இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. மாநிலத்தின் தென் மாவட்டங்களுக்கான வானிலை நிலவரம், சென்னையில் இருந்து கணித்து எச்சரிக்கப்படுகிறது. வட மாவட்டங்களுக்கு கோவாவில் இருந்து கணிக்கப்படுகிறது.கடந்த 2007ம் ஆண்டிலேயே தேவனஹள்ளியில் ரேடார் நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான செயல்திட்டம் வடிவம் பெறவில்லை.இந்த நிலையில், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் ஷோபா, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தன்னுடைய பக்கத்தில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அனுப்பிய கடிதத்தை பகிர்ந்துள்ளார்.பதிவில் ஷோபா கூறியிருப்பதாவது:வானிலையை தெளிவாகவும் முன்கூட்டியே கணிக்கும் வகையில், நவீன சி பேண்ட் டாப்ளர் ரேடார் இந்த ஆண்டுக்குள் பெங்களூரில் நிறுவப்பட உள்ளது. இந்த ரேடார், 250 கி.மீ., துாரம் வரை கண்காணிக்கும் திறன் பெற்றது.தெளிவான வானிலை முன்னறிவிப்பை வெளியிடுவதற்கு தேவையான நவீன ரேடாரை நிறுவும்படி நான் விடுத்த கோரிக்கை இந்திய வானிலை ஆய்வுத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.இந்த ரேடார் பெங்களூரில் நிறுவப்பட்டால், வானிலையை துல்லியமாக கணித்து அறிவிக்க முடியும். இது ஆண்டு இறுதிக்குள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.ரேடார் நிறுவுவதற்கான இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை கையகப்படுத்துமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் கடிதத்தில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு தன் பதிவில் ஷோபா கூறியுள்ளார்.பெங்களூரில் சி பேண்ட் டாப்ளர் ரேடார் நிறுவப்பட்ட பின், மங்களூரில் இரண்டாவது ரேடார் நிறுவ இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago | 1