மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
விஜயபுரா : புதமண தம்பதி, தற்கொலை செய்து கொண்டார்.விஜயபுரா நகரின், சித்தேஸ்வரா லே அவுட்டில் வசித்தவர் மனோஜ்குமார் போளா, 30. இவரது மனைவி ராக்கி, 23. இவர்கள் பரஸ்பரம் காதலித்தனர். பெற்றோரின் சம்மதத்துடன் நான்கு மாதங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்டனர். தம்பதி அன்யோன்யமாக குடும்பம் நடத்தினர். மனோஜின் தாயார் பாரதி, தன் மகளின் ஊருக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த மனோஜ்குமார், ராக்கி தம்பதி நேற்று முன்தினம் இரவு, திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை பாரதி வீட்டுக்கு வந்த போது, மகனும், மருமகளும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம், பக்கத்தினர் உதவியுடன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த ஜலநகர் போலீசார், இருவரின் உடல்களை மீட்டனர். புதுமண தம்பதியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ***
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7