உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி அலை இல்லை: மந்தர் கவுடா

மோடி அலை இல்லை: மந்தர் கவுடா

குடகு : ''கர்நாடகாவில் பிரதமர் மோடி அலை இல்லை,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., மந்தர் கவுடா கூறி உள்ளார்.குடகு மடிகேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மந்தர் கவுடா அளித்த பேட்டி: மைசூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணை, வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, எங்களுக்கு உள்ளது. குடகு மாவட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் பொறுப்பு எடுத்து கொண்டால், லட்சுமணை எளிதில் வெற்றி பெற வைக்க முடியும். மாநில அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் பற்றி, மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.கர்நாடகாவில் பிரதமர் மோடி அலை இல்லை. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, பொய் பேசி வருகிறது. பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, சரியாக வேலை செய்யாததால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. குடகு மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்ற நான் டாக்டர். பொன்னண்ணா வக்கீல். காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் இன்ஜினியர்.நாங்கள் எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து வளர்ந்தவர்கள். லட்சுமண் வெற்றி பெற்றால், அது மக்கள் வெற்றி பெற்றது போன்றது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எத்தனை முறை கர்நாடகா வந்து, ரோடு ஷோ நடத்தினாலும், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். அவர்கள் இருவரும் வந்தால், காங்கிரசுக்கு வெற்றி தான். கடந்த லோக்சபா தேர்தலில், அவர்கள் இருவரும் நடத்திய ரோடு ஷோ தான், காங்கிரசுக்கு வெற்றி பெற்று கொடுத்தது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

A1Suresh
ஏப் 10, 2024 18:11

ஒரு மானிலத்தில் மட்டுமே ஏற்பட்டால் அது மோடி அலை மாறாக மேற்குவங்கம் முதல் பஞ்சாப் வரை, காஷ்மீர் முதல் தமிழகம் வரை, பிஹார் முதல் மஹாராஷ்டிரா வரை, ஒரிஸ்ஸா முதல் ஆந்திரா வரை ஏற்படப்போகும் இந்த அலையை மோடிப் பேரலை அல்லது மோடி சுனாமி என்றுதானே அழைக்கவேண்டும்


A1Suresh
ஏப் 10, 2024 18:09

மோடி அலை இல்லை மோடி சுனாமி தான் இது


RAJ
ஏப் 10, 2024 12:18

வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல மோடி ஒரு கர்மயோகி வெல்வது நிச்சயம்


shyamnats
ஏப் 10, 2024 11:57

மூட்டை நிறைய நெல்லிக்காய் பிரதமர் யார் என்றாலே சிதறிவிடும் இந்தியாவில் பாராளுமன்றத்தில் எதிர் கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத கட்சியில் எவ்வளவோ எதிர்பார்ப்புகள் பரிதாபம் மோடிஜியின் வெற்றிக்கு ராவுல் வின்சியின் பேச்சுக்கள் தான் அடியுரம்


Ramesh Sargam
ஏப் 10, 2024 10:34

கர்நாடகாவில் காங்கிரஸ் அலையும் இல்லை நீ வாயை மூடிக்கொண்டு போ


sundarsvpr
ஏப் 10, 2024 08:51

மோடி வெற்றி பெறுவது அவர் நடாத்திய செயல்பாடுகளை நினைவுபடுத்தியல்ல நிறுத்திய தலைவரை கட்சி நம்புகிறது மோடியை ரதிர்த்து நிற்க ஒருவன் இல்லை என்பதால் இNDiA கூட்டணி மக்கள் ஏற்கவில்லை யுத்தம் என்றால் வாழ்வா சாவா என்பதுதான் இதனை நம்புபவன் அறிவாளி நம்பாதவன் பயப்படுவன் ஒற்றைக்கு ஒற்றை போட்டி என்பதனை இந்தியா கூட்டணி நிலைநிறுத்தினால் மோடி வலு குறையும்


ramani
ஏப் 10, 2024 05:59

காங்கிரஸை அழிக்க சாதாரண அலை போதும் மோடி அலை வேண்டாம் நீங்க தாங்க மாட்டீங்க


மேலும் செய்திகள்











புதிய வீடியோ