உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு கட்டடங்களுக்கு இனி மைசூரு பெயின்ட்

அரசு கட்டடங்களுக்கு இனி மைசூரு பெயின்ட்

பெங்களூரு : கனரக தொழிற் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அளித்த பேட்டி:அரசு சார்ந்த, கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் தொழிற்சாலைக்கு மறு உயிர் கொடுத்து, லாபத்தின் பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இதே போன்று மைசூரு பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் தொழிற்சாலைக்கும் புத்துயிர் அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.இனி வரும் நாட்களில், அரசின் அனைத்து கட்டடங்களுக்கும், மைசூரு பெயின்ட்ஸ் லிமிடெட் தயாரிக்கும் பெயின்டுகளை பயன்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. பல நடவடிக்கைகள் மூலமாக, தொழிற்சாலையை மேம்படுத்தி நடப்பாண்டு 500 கோடி ரூபாய் லாபம் பெற, இலக்கு நிர்ணயித்துள்ளோம்.மைசூரு மஹாராஜா நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் உருவாக்கிய தொழிற்சாலைகளை மேம்படுத்தி, லாபத்தின் பாதைக்கு கொண்டு செல்வது, அரசின் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ