உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் இனி யாரும் வாலாட்ட முடியாது; வந்தாச்சு தற்கொலைப்படை ட்ரோன்கள்

எல்லையில் இனி யாரும் வாலாட்ட முடியாது; வந்தாச்சு தற்கொலைப்படை ட்ரோன்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நம் நாட்டு எல்லைக்குள் நுழைய முயலும் எதிரி நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழிக்கும், உள்ளே நுழைத்தால் துவம்சம் செய்யும், தற்கொலைப்படை ட்ரோன்கள், நம் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள, நாகாஸ்திரா என பெயரிடப்பட்டுள்ள, அதிநவீன ட்ரோன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சோலார் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின், இ.இ.எல்., எனப்படும் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிஸ் நிறுவனம், இந்த ட்ரோனை வடிவமைத்து உள்ளது. இந்த ட்ரோனில் வெடிகுண்டு வைத்து அனுப்பப்படும். அதற்கான இலக்கை நிர்ணயித்து அனுப்பி வைத்தால் போதும். அந்த இலக்கு எந்த இடத்தில் இருக்கிறதோ அங்கு சென்று வானத்தில் காத்திருந்து, சரியான நேரத்தில் தாக்கி அழிக்கும். எல்லைக்கு அப்பாலில் இருக்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலுக்கு இது பயன்படுத்த முடியும். நம் வீரர்கள், தங்களுடைய தோளிலேயே இதை சுமந்து செல்ல முடியும். தன் இலக்கு கிடைத்துவிட்டால், வானில் இருந்து நேராகச் சென்று தன்னையும் அழித்து, இலக்கையும் அழிக்கும். அதனால், இதை, தற்கொலைப்படை ட்ரோன் என்றழைக்கின்றனர்.பல்வேறு சோதனைகளுக்குப் பின், இந்த ட்ரோனுக்கு மத்திய அரசு கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. முதல்கட்டமாக, 480 ட்ரோன்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், 120 ட்ரோன்கள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜூன் 15, 2024 12:22

மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள்: எல்லைக்குள்ளேயே வாலாட்டும் லஞ்சம் வாங்கும், ஊழல் புரியும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இவர்களிடமிருந்தும் நாட்டு மக்கள் காப்பாற்றப்படவேண்டும். ஆவண செய்ய விழைகிறேன். நன்றி.


Sampath Kumar
ஜூன் 15, 2024 11:39

அப்படி இனியாவது நமது தமிழ் நாட்டு வீரர்களை பார்டருக்கு அனுப்பி பழிவாங்கும் போக்கு குறையும் என்று நம்முவோம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 15, 2024 12:18

தமிழக வீரர்களை பத்திரமாக வீட்டுக்குள்ளே பூட்டி வைத்து கொள்ளவும். வீரத் தமிழன் வசனம் எல்லாம் சும்மா தானா


hari
ஜூன் 15, 2024 23:11

சம்பத்து நீங்கள் தான் உண்மையான வீட்டுக்குள் இருக்கும் விரதமிழன்.,.... டாஸ்மாக் கெளம்பலையா


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 15, 2024 11:26

அக்னி பாத் போல நாட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தவர்கள் பதிவு செய்து வைத்தால் .தேவைப்பாடு போது பயன் படுத்தலாம் .. தற்கொலை செய்பவர்களை வைத்து யாரும் அரசியல் வியாபாரம் செய்யவம் முடியாது


தமிழ்வேள்
ஜூன் 15, 2024 10:15

இந்த விதமான டிரோன்களை, தமிழக பிரிவினைவாத தேசவிரோத திராவிட இயக்க இருப்பிடங்கள் மீது பயன்படுத்தி நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்


தேவாஜீவன்
ஜூன் 15, 2024 09:55

அங்கே தற்கொலைக்கு ஆளே நிறைய பேர் இருக்காங்க. தவிர, உங்களுக்கு கிடைக்கும் தொழில்நுட்பமவிங்களுக்கு கிடைக்க எத்தனை நாளாகும். உங்க கிட்டே இருக்கும் ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லாதீங்க. எல்லாத்துக்கும் மெடல்.


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 15, 2024 09:14

இது போன்ற இராணுவ சாதனங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். எல்லாமே சாதனை பட்டியலில் கொண்டு வர தேவையில்லை.


ராமகிருஷ்ணன்
ஜூன் 15, 2024 09:07

அவ்வப்போது வாலாட்டும் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்க பயன்படுத்த வேண்டும்


Varadarajan Nagarajan
ஜூன் 15, 2024 08:21

பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விபரங்களை பொதுவெளியில் வெளியிடுவது பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சமீபகாலமாக ரகசிய நடவடிக்கைகள், கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள், காவல்துறையின் சோதனைகள் குறித்த பொதுவெளியில் பகிரப்படுகின்றன. இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் குற்றவாளிகளுக்கு முன்னெச்சரிக்கை அளிப்பதாகவே அமையும்.


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 07:20

இது போன்ற இரகசியங்களை பிரசுரிப்பதை தவிர்த்து இருக்கலாம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ