உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மம்தாவுக்கு நட்டா ‛‛குட்டு

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மம்தாவுக்கு நட்டா ‛‛குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா என்ற பகுதியில், திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், பொது மக்கள் மத்தியில், நடுரோட்டில் ஒரு பெண் உட்பட இருவரையும் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xivejibd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு பெண் உட்பட இருவரையும் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது அங்கு பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கிறது.ஆனால் திரிணமுல் கட்சி தொண்டர்களும், எம்.எல்.ஏ.,க்களும் இந்த செயலை நியாயப்படுத்துகிறார்கள். மம்தா ஆட்சியில், சந்தேஷ்காலி, உத்தர் தினாஜ்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

K.n. Dhasarathan
ஜூலை 01, 2024 21:02

ஐயா நட்ட மணிப்பூரில் நீங்கள் பெண்களை காப்பாற்றிய விதம், இணைய தளத்தை முடக்கியது என்று மிக சிறப்பான ஆட்சி யை கொடுத்ததற்கு பொய்.ஜே.பி க்கு நன்றி .


KR
ஜூலை 01, 2024 19:20

All useless talk by BJP leadership. They don't have the courage to invoke article 356 and dismiss this lawless Mamata government. No one can save Bengalis from this downward spiral to nowhere. Pity West Bengal women in particular


அரசு
ஜூலை 01, 2024 18:28

நட்டா சொல்வது உண்மை தான். ஏனெனில் மேற்கு வங்க மாநிலத்தில், ஆளுநர் மாளிகையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.


Vathsan
ஜூலை 01, 2024 13:32

சொல்லிட்டாரு உண்மை விளம்பி...


MADHAVAN
ஜூலை 01, 2024 13:06

பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச இவருக்கு என்ன யோக்கியதை இருக்கு,


MADHAVAN
ஜூலை 01, 2024 13:01

மணிப்பூர்ல பெண்கள் நிம்மதியாக வாழலாமா?


ஆரூர் ரங்
ஜூலை 01, 2024 14:10

60 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மணிப்பூரில் வன்முறை நடக்கிறது. ஆட்சி பிடிக்காதவர்கள் அவதூறு பேசுகிறார்கள்.


MADHAVAN
ஜூலை 01, 2024 12:44

பிஜேபி ஆட்சியை செய்யும் குஜராத்துக்கு ஒரு வருடத்தில் மட்டும் 41000 பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்காங்க னு 2023 மத்திய மனிதவள மேம்பாட்டு துறை ஆய்வறிக்கைல குறிப்பிட்டுஇருக்கு,


MADHAVAN
ஜூலை 01, 2024 12:42

திரு நட்டா அவர்களே, அடுத்தவரை குறை சொல்லும் முன்பு கொஞ்சம் உங்களது ஆட்சியை பாக்கவும், உதிர்ப்பிரதேசத்துல 1 மணிநேரத்தில் 12 கற்பழிப்பு நடக்கிறது னு ஒன்றிய அரசு 2022 - 2023 அறிக்கை தந்துஇருக்கு,


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை