உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்ப அரசியலுக்கு ஆதரவு இல்லை: பெலகாவி, சிக்கோடி மக்கள் நிரூபணம்

குடும்ப அரசியலுக்கு ஆதரவு இல்லை: பெலகாவி, சிக்கோடி மக்கள் நிரூபணம்

பெலகாவி: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பங்களை சொந்த தொகுதி வாக்காளர்கள் தோற்கடித்துள்ளனர்.லோக்சபா தேர்தலில், பெலகாவி தொகுதியில் மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், தன் மகன் மிருணாளுக்கு பல எதிர்ப்புகளுக்கு இடையே, சீட் பெற்றார். அதேபோன்று பெலகாவியின், சிக்கோடி தொகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தன் மகள் பிரியங்காவுக்கு சீட் பெற்றார்.பெலகாவியில் ஹெப்பால்கரின் குடும்பம், அரசியல் ரீதியில் செல்வாக்கு கொண்டது. வாக்குறுதி திட்டங்கள், வேட்பாளருக்கு உதவியாக இருக்கும் என, நம்பினர். லட்சுமி ஹெப்பால்கர் பெலகாவி தொகுதியில், அதிக கவனம் வைத்து செயல்பட்டார். மகனுக்காக கிராமம், கிராமமாக சுற்றி வந்தார். மிருணாள் 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என, காங்கிரஸ் எதிர்பார்த்தது; பலன் கிடைக்கவில்லை.அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல் முயற்சியிலேயே மிருணாள் தோற்றதால், அடுத்த தேர்தல்களில் அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என, காங்., வட்டாரம் கூறியுள்ளது.பெலகாவி ரூரல் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள லட்சுமியின் மகனுக்கு, சீட் கொடுத்ததை தொகுதி மக்கள் ஆதரிக்கவில்லை. குடும்ப அரசியலுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.பெலகாவி மாவட்டத்தின், மற்றொரு செல்வாக்கான அரசியல் குடும்பத்துக்கும், இதே சூழ்நிலை ஏற்பட்டது. பெலகாவியின் சிக்கோடியில் பா.ஜ., வேட்பாளர் அன்னா சாஹேப் ஜொல்லே தோல்வி அடைந்தார். சிக்கோடியின் எட்டு சட்டசபை தொகுதியில் நிப்பானியும் ஒன்றாகும். இதில் அன்னா சாஹேப் ஜொல்லே மனைவி சசிகலா ஜொல்லே பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். சிக்கோடி தொகுதியில், பிரியங்கா சதீஷ் ஜார்கிஹோளி வெற்றி பெற்றார்; பா.ஜ.,வின் அன்னா சாஹேப் தோற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி