வாசகர்கள் கருத்துகள் ( 1 )
he is unfit to be in congress. pl change to some other party
சிக்கபல்லாபூர்: ''பா.ஜ., -- எம்.பி., சுதாகரை போன்ற துரோகிகள், எங்கள் கட்சியில் யாரும் இல்லை,'' என, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கூறியுள்ளார்.இது குறித்து, சிக்கபல்லாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:'மூடா' முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் அவரை பா.ஜ.,வால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் ஐந்து ஆண்டுகளும் சித்தராமையாவை முதல்வராக தக்கவைப்போம்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ., தலைவர்கள் 100 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக, எங்கள் கட்சியின் ரவி கனிகா கூறி உள்ளார். சிக்கபல்லாபூர் பா.ஜ., -- எம்.பி., சுதாகரை போன்ற துரோகிகள், எங்கள் கட்சியில் யாரும் இல்லை. பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தன் தந்தை எடியூரப்பா பெயரை வைத்து அரசியலுக்கு வந்தவர். மத்திய அமைச்சர் குமாரசாமியின் தந்தை தேவகவுடா முன்னாள் பிரதமர்.ஆனால், எங்கள் முதல்வரும், துணை முதல்வரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசியலில் உயரத்திற்கு வந்தவர்கள். அவர்களின் வளர்ச்சியை எதிர்க்கட்சியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
he is unfit to be in congress. pl change to some other party