உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சரவை குழுக்கள் மத்திய அரசு அறிவிப்பு

அமைச்சரவை குழுக்கள் மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி, :பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில், முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவைக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில், முக்கிய முடிவுகளை எடுக்க, அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், அமைச்சரவைக் குழுக்களை அமைத்து, பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு நேற்று உத்தரவிட்டது.பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில், பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், கனரக தொழில்கள் மற்றும் எக்கு துறை அமைச்சருமான குமாரசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இக்குழுவில், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மீன்வளத் துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.பார்லி., விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜிவ் ரஞ்சன் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார்.விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பழங்குடியினர் விவகார அமைச்சர் ஜுவல் ஓரம், பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.இக்குழுவில், சிறப்பு அழைப்பாளர்களாக, தனிப் பொறுப்புடன் கூடிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், பார்லி., விவகார இணை அமைச்சர் முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்