உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா பி.ஜே.டி.மாஜி ராஜ்யசபா எம்.பி., இன்று பா.ஜ.வில் ஐக்கியம்

ஒடிசா பி.ஜே.டி.மாஜி ராஜ்யசபா எம்.பி., இன்று பா.ஜ.வில் ஐக்கியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வரம்: ஒடிசாவின் பிஜூ ஜனதா தள கட்சியின் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் பெண் எம்.பி. மம்தா மொகந்த் இன்று பா.ஜ.வில் ஐக்கியமானார்.இம்மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து கட்சியின் முக்கிய தலைவர்கள் நவீன்பட்நாயக் மீது அதிருப்தியில் இருந்தனர்.இந்நிலையில் இக்கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி., மம்தா மொகந்த் நேற்று(31.07.2024) திடீரென எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இவர் பிஜூ ஜனதா தளத்தின் செல்வாக்கு மிக்க குடுமி பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரிடம் அளித்துவிட்டதாக தெரிவித்தார்.இந்நிலையில் இன்று ( ஆக.,01) டில்லி சென்று ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பா.ஜ. லோக்சபா எம்.பி. பிரதீப் பனிகிராகி தேசிய செயலாளர் அருண்சிங், ஒடிசா பா.ஜ. மாநில தலைவர் விஜய்பால்சிங்தோம் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.வில் ஐக்கியமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 23:53

இது ஜஸ்ட் தொடக்கம் தான். இனி ஒவ்வொரு மாதமும் ஐந்து அல்லது ஆறு எம்பி பிஜேபி கட்சியில் இணைவார்கள். காரணம் பிஜேபி நல்லாட்சி தரும்போது, அதனுடன் இருந்தால் தான், திரும்ப ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தில் தான்.


Easwar Kamal
ஆக 01, 2024 22:08

நாயுடு மற்றும் பல்டி குமார் பத்திரபடுத்தி கொங்கையா. லோட்டஸ் ஆபரேஷன் ஆரம்பிச்சிட்டானுவ. இவனுங்க ஒழுங்கா ஆட்சி நடத்த போறது இல்லை. எவனை இழுக்கிறது எப்படி majoirty காண்பிக்கிறது ipadiaye 5 வருஷம் ஓடிருவானுவ.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை