உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாவியை மறந்த அதிகாரி: ஓட்டு எண்ணிக்கை தாமதம்

சாவியை மறந்த அதிகாரி: ஓட்டு எண்ணிக்கை தாமதம்

விஜயபுரா: தேர்தல் அதிகாரி ஒருவர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த பாதுகாப்பு அறையின் சாவியை, வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தார்.கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நேற்று காலை துவங்கியது. அந்தந்த பகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணிகளை துவக்கினர்.விஜயபுரா மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரி ஷரீப், நேற்று காலை பாதுகாப்பு அறைக்கு வந்தார். கதவை திறக்க முற்பட்டபோது, சாவியை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. உடனடியாக வீட்டுக்குச் சென்று, சாவியை கொண்டு வந்து பாதுகாப்பு அறையின் கதவை திறந்தார். இவரது மறதியால், ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை