மேலும் செய்திகள்
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
2 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
3 hour(s) ago
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், 'ஆப்பரேஷன் கை' வெகு ஜோராக நடக்கிறது. பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களை காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சியில் முதல்வர் சித்தராமையாவே ஆர்வம் காண்பிக்கிறார்.மைசூரு மாவட்டம், முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டம். மைசூரு மற்றும் அதன் அண்டை மாவட்டமான சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதிகளை கைப்பற்றுவது, முதல்வர் சித்தராமையாவுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது.முதல்வராக இருப்பதால், இந்த இரண்டு தொகுதிகளில், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறவைக்க வேண்டிய கட்டாயத்தில், முதல்வர் சிக்கியுள்ளார்.எனவே பா.ஜ., தலைவர்களுக்கு வலை விரித்துள்ளார். பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத்தின் மருமகன் தீரஜ் பிரசாத்தை, காங்கிரசுக்கு அழைத்து வந்துள்ளனர். தன் ஆதரவாளர்களுடன், காங்கிரசில் இணைய தீரஜ் பிரசாத் தயாராகிறார். சாம்ராஜ்நகரில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், இவர் கட்சியில் ஐக்கியமாகிறார்.இவரது மூலம் சீனிவாச பிரசாத்தின் ஆதரவை பெற, காங்., முயற்சிக்கிறது. இவரது செல்வாக்கை பயன்படுத்தி, தலித் ஓட்டுகளை பெறுவது கட்சியின் திட்டமாகும். இந்த சமுதாயத்தின் பல தலைவர்களுக்கும் காங்., வலை விரித்துள்ளது.- நமது நிருபர் -
2 hour(s) ago
3 hour(s) ago