உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆப்பரேஷன்கள் நிறுத்தம்

தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆப்பரேஷன்கள் நிறுத்தம்

கலபுரகி: கலபுரகியின் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.பெங்களூரின் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை பிரபலமானது. தரமான சிகிச்சை கிடைக்கிறது. இத்தகைய மருத்துவமனை, பெங்களூரில் மட்டுமே இருந்தது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும், சிகிச்சைக்காக பெங்களூக்கு வந்தனர்.இதை மனதில் கொண்டு, மாநில அரசு, கலபுரகியில் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை கட்டியது. இந்த மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். இவர்களில் 30 முதல் 40 பேர் மருத்துவமனையில் சேருகின்றனர். சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கு உதவியாக இருந்தது.ஆனால் சமீப நாட்களாக, மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் வெளியே சென்று, குடிநீர் வாங்கி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால், அறுவை சிகிச்சை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:கலபுரகி பகுதியில் கன மழை பெய்ததால் மண் கலந்த நீர் வருகிறது. இந்த தண்ணீரை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது. இதனால், மிகவும் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்துள்ளோம். நோயாளிகளுக்கு பிரச்னை ஏற்படாமல், டிரம்களில் நீர் நிரப்பி வைத்து உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி