உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகள் செயல் ரமாநாத் ராய் கடுப்பு

எதிர்க்கட்சிகள் செயல் ரமாநாத் ராய் கடுப்பு

மங்களூரு: ''ஆட்சியில் இருந்த போது, ஊழல் செய்தவர்களே இப்போது பாதயாத்திரை நடத்துவது, நகைப்புக்குரியது,'' என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரமாநாத் ராய் தெரிவித்தார்.தட்சிணகன்னடா, மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஊழலே இல்லாத விஷயத்தை வைத்து கொண்டு, அரசு மற்றும் காங்கிரசுக்கு, கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என, பா.ஜ., - ம.ஜ.த., பாதயாத்திரை நடத்துகின்றன.முதல்வர் சித்தராமையாவுக்கு, கவர்னர் நோட்டீஸ் அளித்ததன் பின்னணியில், அரசியல் நோக்கம் உள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, தெளிவாக தெரிகிறது. மக்களுக்கு உண்மையை விவரிக்க, காங்கிரஸ் முயற்சிக்கிறது.பா.ஜ.,வினர் ஆட்சியில் இருந்த போது, ஊழலில் ஈடுபட்டனர். ஊழல் செய்தவர்களே இப்போது பாதயாத்திரை நடத்துவது, நகைப்புக்குரியது,மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் கஸ்துாரி ரங்கன் அறிக்கையை, செயல்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுடையது. மாநில அரசுகள் சில மாற்றங்களை மட்டுமே கூற முடியும். மக்களின் குடியிருப்புக்கு பாதிப்பு ஏற்படாமல், மாநில அரசுகளின் ஆலோசனைகளை ஏற்று, மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை