உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சூரிய மின்சக்தி வரி குறைப்பு

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சூரிய மின்சக்தி வரி குறைப்பு

திருவனந்தபுரம், கேரளாவில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான எரிசக்தி வரி, நீதிமன்ற முத்திரை கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கான நிதி மசோதா, அந்த மாநில சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான எரிசக்தி வரி 1.20 பைசாவில் இருந்து 15 பைசாவாக உயர்த்தப்பட்டது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த வரி உயர்வு, வீட்டு மேற்கூரைகளில் சோலார் தகடுகளை பொருத்தியவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வரி உயர்வுக்கு விலக்கு அளிக்கும் நிதி மசோதா நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, சூரிய ஒளி மின் உற்பத்திக்கு உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்பட்டது. இதேபோல், குடும்ப நல நீதிமன்றங்களில் சொத்து தொடர்பான வழக்குகளுக்கான முத்திரை கட்டணமும் குறைக்கப்பட்டது.வீடு வாடகை, குத்தகை ஒப்பந்தங்கள் மீதான முத்திரை வரி, பெரிய சுற்றுலா பஸ்களுக்கான மூன்று மாத சாலை வரி உள்ளிட்டவையும் குறைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
ஜூலை 12, 2024 11:45

'வானம் பொழிகிறது பூமி விளைகிறது,உனக்கேன் கொடுப்பது கிஸ்தி?', 'அங்கே கொஞ்சிவிளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா மச்சானா?' இயற்கையில் கிடைக்கும் ஒளியை பயன்படுத்தி வீட்டுக்குள் மின்சாரத்தை பெறுவதற்கு எதற்கு தரவேண்டும் வரி ? குடிநீருக்கு வரி, கழிவு நீருக்கு வரி, சாலையில் வாகனம் ஓட்டினால் வரி, ஓட்டவில்லையென்றாலும் சாலை வரி, இன்சூரன்ஸ் அதற்கும் வரி, வேடிக்கை பார்த்தல் கேளிக்கை வரி, உப்புக்கும் வரி, சர்க்கரைக்கு வரி, அரிசிக்கும் வரி, மாவுகளுக்கும் வரி, துணிகளுக்கு வரி, இயந்திரங்களுக்கு வரி, பொருள் தயாரித்தால் வரி, கட்டினால் வரி, மின்சாரம் பெற்றால் வரி, வரி இல்லாத இடம் பிறப்பு மற்றும் இறப்புகளை மட்டுமே . வாழ்க வளமுடன் . அரசு சேவை குறைத்துக்கொள்ளவேண்டும், தேவையான துறைகள் மட்டுமே வைத்துக்கொண்டு தேவையான ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் , செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கொடுக்கவேண்டும் . வாழ்க வளமுடன் அரிது அரிது மானிடராய்ப்பித்தல் அரிது அதிலும் அரசு ஊழியராக பிறப்பது ராஜ யோகம், . வந்தே மாதரம்


Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:20

வரியை விண்ணை முட்டும் அளவுக்கு ஏற்றி அதன் பின் குறைத்து எதையோ நினைவு படுத்துகிறது...


S R George Fernandaz
ஜூலை 12, 2024 10:31

ஆமாம் பெட்ரோல் விலை 10 ரூபாய் ஏத்தி 50 பைசா குறைப்பது போல் உள்ளது...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை