உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்

ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்

- நமது நிருபர் -மதுரையில் இருந்து பெங்களூருக்கு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் அதிகாலை, 5:15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் திருச்சிக்கு காலை, 7:15க்கு செல்கிறது. அங்கிருந்து, 7:20 மணிக்கு புறப்பட்டு காலை, 9:55 மணிக்கு சேலம் செல்கிறது. அங்கு, 10:00 மணிக்கு புறப்பட்டு மதியம், 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷன் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனில் மதியம், 1:45 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு, 10:25 மணிக்கு மதுரை வருகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று அதிகாலை, 5:15 மணிக்கு நடக்கிறது.இந்த வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில் நிறுத்தம் இல்லை. மேலும், திருச்சியை சுற்றி செல்வதால் துாரம், 145 கி.மீ., அதிகரிக்கிறது. 2 மணி நேரம் பயணமும், கட்டணமும் அதிகம் உள்ளது. எனவே, திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்கலாம்.மதுரை - பெங்களூரு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயிலை திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும். இத்தடத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரங்களான திண்டுக்கல், ஓசூரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ganesh Kumar
ஜூன் 20, 2024 03:15

நேரம் மிச்சப்பட வேண்டும் என விரும்புவர்கள் அதற்கான விலையை கொடுக்கிறார்கள். உங்களை யாரும் அதிக விலை கொடுத்து வந்தே பாரத் ரயிலில் செல்ல கட்டாயப்படுத்த வில்லையே விலை அதிகம் என கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள்


Janarthanan
ஜூன் 18, 2024 09:41

How middle class people afford AC trains?? Sleeper & unreserved coaches were reduced by Modi goverment and now they are overcrowded. 90% people need ordinary trains, but Vandhae bharat trains inaugurated to collect more fares from people


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை