உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஸ்வரூபம் எடுக்கும் செரெலாக் சர்ச்சை விசாரணைக்கு உத்தரவு

விஸ்வரூபம் எடுக்கும் செரெலாக் சர்ச்சை விசாரணைக்கு உத்தரவு

புதுடில்லி, நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் 'செரெலாக்' உணவுப் பொருளில், சர்க்கரை அளவு அதிகம் இருப்பதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில், 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான செரெலாக் குழந்தைகள் உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் விற்கப்படும் செரெலாக் உணவில், ஒரு ஸ்பூன் உணவில் 2.7 கிராம் சர்க்கரை இருப்பதாகவும், அதுவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் செரெலாக்கில், அந்த அளவு சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலரும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருமான நிதி கரே கூறுகையில், ''இந்த விவகாரம் குறித்து உடனடி விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறியும்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.இந்த ஆய்வு அறிக்கை குறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மாயவரத்தான்
ஏப் 21, 2024 22:56

இந்த மோடி அரசில்தான் பல லட்சம் கோடி வியாபாரம் செய்யக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன பாராட்டுக்கள்


Sampath Kumar
ஏப் 20, 2024 09:38

இப்படி தான் நெஸ்லே நிறுவனத்தின் மக்கி நூடுல்ஸ் விவகாரத்தில் ஹேச்வய் மெட்டல் அளவு மிக அதிக மகா உள்ளதாக இந்திய ஆய்வு கொடம் தெரிவிக்க இல்லை அது தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது அது ஆப்பிரிக்கா விற்கு போக வேண்டிய நூடுலேசென்று சொல்லி தப்பித்தார்கள் இன்று சேரலக் இதுவும் அப்படிதான் மாறும் உண்மையில் நமது மக்களின் அறியாமையையும், வியாபர தந்திரங்களையும் வைத்து பிழைப்பு நடத்தும் கார்பொரேட் கம்பெனிகளி மக்கள் புறக்கணித்தல் மட்டுமே இந்த தவறு நடக்காது


NicoleThomson
ஏப் 20, 2024 07:05

டாஸ்மாக் என்று அரசே கொலைகார மதுவினை விற்கையில் சுகர் என்று ஐரோப்பிய நிறுவனம் நினைத்திருக்கலாம்


Bye Pass
ஏப் 20, 2024 04:54

மது எனெர்ஜி டானிக்கா ? சிகரெட் உடம்புக்கு நல்லதா ?


rama adhavan
ஏப் 19, 2024 23:38

தேவை இல்லாத விவகாரம் மேலை நாடுகளில் ஐஸ் கிரீம், குக்கிகளில் சர்க்கரை அளவு மிக அதிகம் குழந்தைகளும் அதிகம் உன்கின்றன அதில் இல்லாத கெடுதியா? இது ஒரு வெள்ளை சதி நம்ப வேண்டாம்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி