மனநல காப்பக டாக்டரை டிஸ்மிஸ் செய்ய உத்தரவு
புதுடில்லி:மனநலக் காப்பகத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காப்பக டாக்டரை பணி நீக்கம் செய்ய துணைநிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.புதுடில்லி ரோஹிணியில் உள்ள ஆஷா கிரண் மனநலக் காப்பத்தில் ஜூலை மாதம்14 பேர் உயிரிழந்தனர்.ஊட்டச் சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதி குறைபாடு, ஒரே அறையில் அளவுக்கு அதிகமானோரை தங்க வைத்தது, தொற்று நோய் பரவல், குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் 14 பேர் மரணம் அடைந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.விசாரணைக் குழு அறிக்கையை பரிசீலித்த டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, ஆஷா கிரண் காப்பக நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், விசாரணைக்கு இடையூறாக இருந்த காப்பக டாக்டரை பணிநீக்கம் செய்யவும் டில்லி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.