உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

மைசூரு: விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.மைசூரு கூர்ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு, 39; கூலித்தொழிலாளி. கடந்த 19ம் தேதி காலை, ஹெப்பால் தொழிற்பேட்டை அருகே பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சந்துரு, மைசூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். சந்துருவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை மூலம் சந்துருவின் கல்லீரல், சிறுநீரகம், கருவிழி எடுக்கப்பட்டு நான்கு பேருக்கு பொருத்தப்பட்டது.உடல் உறுப்பு தானம் மூலம், நான்கு பேரின் வாழ்வில் ஒளி ஏற்றிய சந்துருவின் குடும்பத்தினருக்கு, டாக்டர்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை