உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதலீட்டாளர்களிடம் மோசடி பத்மஸ்ரீ விருது பெற்றவர் கைது

முதலீட்டாளர்களிடம் மோசடி பத்மஸ்ரீ விருது பெற்றவர் கைது

திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் சி.மேனன். ஹீவான் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த மேனன், 2016ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெற்றவர். இவர், தன் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கு பணத்தை தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறினார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட ஏராளமானோர், மேனன் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் முதிர்வு காலம் முடிந்தும், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாமல் மேனன் ஏமாற்றினார்.இவ்வாறு 62 பேரிடம் மொத்தம், 7. 78 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து 18 பேர், மேனன் மீது அளித்த புகாரை தொடர்ந்து, வழக்கு விசாரணை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. சுந்தர் சி.மேனன் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த தகவலை மறைத்து அவர் விருது பெற்றதாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல மனுவை சிலர் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kulandai kannan
ஆக 07, 2024 13:33

விருதுகளுக்கு விடை கொடுப்போம். ராணுவத்தினருக்கு மட்டும் கொடுத்தால் போதும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 09:51

சுந்தர் சி மேனன், சுந்தர் சி இதுங்களுக்குள்ள ஏதாவது தொடர்பு இருக்குமா ????


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 09:50

சேட்டன்கள் என்றாலே பிராடுகள்தான்.. விருது கொடுத்து கேரளாவில் கால் ஊன்றிய பாஜகவுக்கு நன்றி ......


vijai
ஆக 07, 2024 20:53

பாஜகவ சொல்றத தவிர வேற வேலையே இல்லையா


அப்பாவி
ஆக 07, 2024 08:00

இருக்காதே... அவங்க அவார்ட் குடுத்தா ரொம்ப நல்லவங்களா இருக்கணுமே.


Narayanan Muthu
ஆக 07, 2024 07:25

மோசடி ஆசாமி என்பது பாஜக அரசால் விருது கொடுக்கப்பட்டபோதே தெரியும். இவர்கள் எப்போதும் ஊழல் ஆசாமிகள், கொலை கொள்ளை அடிதடி மோசடி ஆசாமிகளுக்கே அடைக்கலம் கொடுப்பார்கள் என்பது தெரிந்ததே


வேற்றுமையில் ஒற்றுமை
ஆக 07, 2024 08:38

மோசடி


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2024 06:19

முகத்தை பார்த்ததும் நினைத்தேன்


Kasimani Baskaran
ஆக 07, 2024 05:30

விருது பெற்றால் மோசடியில் ஈடுபடக்கூடாது என்ற விதி இருக்கிறதா என்ன?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ