உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேரன்ட்ஸ் அன்பே காட்டலே... மார்க் எடுக்க மட்டும் நிர்ப்பந்திக்கிறாங்க! பெற்றோருடன் செல்ல மாணவர் மறுப்பு

பேரன்ட்ஸ் அன்பே காட்டலே... மார்க் எடுக்க மட்டும் நிர்ப்பந்திக்கிறாங்க! பெற்றோருடன் செல்ல மாணவர் மறுப்பு

மங்களூரு, தேர்வில் அதிக மதிப்பெண் பெற அழுத்தம் கொடுத்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய கல்லுாரி மாணவர், மீண்டும் பெற்றோருடன் செல்ல மறுத்த சம்பவம், கர்நாடக மக்களை வேதனை அடைய வைத்தது.தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் பரங்கிப்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவரது பெற்றோருக்கு ஒரே மகன். பி.யு.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த மாதம் 25ம் தேதி, இறுதி பருவத் தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' வாங்க கல்லுாரிக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை.அவரை கண்டுபிடிக்க, எஸ்.பி., தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது.இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவரின் தந்தை, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் காமேஸ்வர் ராவ், நடாப் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவரின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து கடந்த 8ம் தேதி, உடுப்பியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சட்டை வாங்க வந்திருந்த மாணவரை போலீசார் மீட்டனர். அவர் தற்போது மங்களூரு சிறுவர் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டார்.தேர்வுக்கு பயந்து மாணவர் வீட்டைவிட்டு வெளியேறியதாக, எஸ்.பி.யதீஷிடம் கூறி இருந்தார்.இந்நிலையில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், மாணவர் தன் பெற்றோருடன் செல்ல மறுக்கிறார். அவரது நலன் கருதி, யோசித்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம், என்றார்.மனுதாரர் தரப்பு வக்கீல் கூறுகையில், மாணவர் மீட்கப்பட்ட அன்று தன் தாயிடம் மொபைல் போனில் பேசினார். தன்னை யாரோ கடத்திச் சென்றதாக கூறினார். மாணவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'தேர்வை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தேர்வு குறித்து ஏன் அழுத்தம் கொடுக்கிறீர்கள்?' என்று மாணவரின் பெற்றோரிடம் கேட்டனர்.'இந்த விவகாரத்தில் குழந்தைகள் நலக் குழு முடிவு எடுக்க வேண்டும்' என கூறிய நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.சிறுவர் காப்பகத்தில் உள்ள மாணவரை சந்தித்து பேசுவதற்கு பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மகனை சந்தித்து பேச பெற்றோர் நேற்று மங்களூரு புறப்பட்டு சென்றனர்.எஸ்.பி., யதீஷிடம் மாணவர், தனக்கு பெற்றோரின் அன்பு கிடைக்கவில்லை என்றும், தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே நிர்ப்பந்தித்ததாகவும் கூறி வருந்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

pmsamy
மார் 13, 2025 15:06

மதிப்பெண்களுக்கு ஆசைப்படும் பெற்றோர்களுக்கு குழந்தை தேவையில்லை


VSMani
மார் 13, 2025 10:36

எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அதிக மன அழுத்தம் கொடுக்கிறார்கள். கடவுள் ஒவ்வொருவரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு திறமையை கொடுத்திருக்கிறார். பெற்றோர்கள் நண்பன் திரைப்படத்தை பார்க்கவேண்டும் .


Svs Yaadum oore
மார் 13, 2025 10:52

இதுதான் பிரச்சனை ....திரைப்படம் பார்த்து வாழ்க்கையை கற்று கொள்ள சொல்வது ..சினிமாவில் நல்ல விஷயங்களா இருக்குது ..பிள்ளைகளை வளர்க்க தமிழில் எத்தனையோ வாழக்கை நெறி நூல்கள் ....இங்கு தமிழ் வளர்த்து அதெல்லாம் மறந்து போனது ..ஆனால் கடைசியில் வருங்கால முதல்வரையும் சினிமாவில் தேடும் நிலைமை ..


rama adhavan
மார் 13, 2025 10:25

அதிகம் செல்லம் தான் காரணம். 1 வருடம் சீர்திருத்த பள்ளியிளளேயே கிடக்கட்டும். புத்தி வரும். அங்கேயே ஐ டி ஐ இல் பிட்டர், கார்பேன்டர், எலெக்ட்ரிசின் இதில் எதோ ஒரு படிப்பு படித்து மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்.


Ganapathy
மார் 13, 2025 11:35

ஐடிஐனா அவ்வளவு எளக்காரமா உனக்கு? உன்னைப் போன்ற நாலு பேருக்கு அங்கு படிக்கும் மாணவனால் வேலை தர முடியும். அங்கு சேர்ந்து படித்து தெளிய முதலில் உனக்கு அறிவு வேண்டும்.


Sivasakthi
மார் 13, 2025 09:10

உங்கள் கருத்துக்கள் பொதுவாக ஏற்புடையதாகவே இருக்கும். ஆனால் இன்று நீங்கள் பதிவிட்டிருப்பது சரியான கருத்து அல்ல. அந்த காலத்தில் பெண்கள் வீட்டில் நாள் முழுவதும் செக்கு மாடு போல் வேலை செய்து கொண்டும், வீட்டில் உள்ளவர்களை கவனித்துக் கொண்டும் தன் தேவைகளை குறைத்துக் கொண்டு பிள்ளைகளை வளர்த்து பாடுபட்டாலும் கணவர்கள் அவர்களுக்கு பெரிதாக எந்தவித கவுரவத்தையும் கொடுக்கவில்லையே. என்னமோ சும்மா உட்கார வைத்து சோறு போடுவது போல் எவ்வளவு ஏச்சு, பேச்சுக்கள்.. மேலும் வரதட்சிணை கொடுமை, மாமியார் கொடுமை, பல வீடுகளில் அடி உதை என்று எவ்வளவு கொடுமைகள்.. இதிலிருந்து மீண்டு வரவும் தங்கள் சுய மரியாதை காப்பாற்றிக் கொள்ளவும் நிதி சுமையில் கணவனுக்கு தோள் கொடுக்கவும் பெண்கள் வேலைக்கு செல்வது. தவிரவும் தங்கள் திறமையும் தகுதியும் வளர்த்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உள்ளது. கள்ளக்காதல் என்று நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆண்களும் முக்கிய காரணம் என்பதே உண்மை


Svs Yaadum oore
மார் 13, 2025 11:32

நீங்கள் சொல்வது எதையும் நான் மறுக்கவில்லை .....ஒரு பிரச்னையை தீர்க்க இன்னொரு பெரிய பிரச்னையை விலைக்கு வாங்கி விட்டோம் என்றுதான் நான் சொல்வது ....


Iyer
மார் 13, 2025 07:42

DO NOT TREAT YOUR CHILDREN AS "20 Year Fixed Deposits". Academic Performance is secondary. Make your Children engage in Yoga & other Outdoor sports, music, dance. Know what he / she is most interested in.


अप्पावी
மார் 13, 2025 07:30

இந்த மாணவர் கடைசி வரையில் அம்மா அப்பா காசில் கஞ்சி குடிப்பார் என்பது திண்ணம்..


Svs Yaadum oore
மார் 13, 2025 07:03

மாணவர் மீட்கப்பட்ட அன்று தன் தாயிடம் மொபைல் போனில் பேசினாராம் . பெற்றோரின் அன்பு கிடைக்கவில்லையாம் ..... இதற்குத்தான் அந்த காலத்தில் பெண்கள் வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்து கொள்ள சொன்னது ....ஆண் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் ....பெண்கள் வேலைக்கு சென்றால் இப்படி பிள்ளைகள் தறிகெட்டு போனது .....அதனுடன் வேலை பார்க்கும் இடத்தில கள்ள காதல் அதனால் கொலை ஒழுக்கக்கேடு என்று சீரழிந்தது ....இதை சொன்னால் உடனே பெண்ணுரிமை பிற்போக்குத்தனம் என்று கிளம்புவானுங்க ...


Amar Akbar Antony
மார் 13, 2025 07:37

அப்போ வரதட்சிணை எனும் கொடும்கோலனை கையில் வைத்து பெண்களை அடிமையாக நடத்திய ஆண்களையும் அப்படிப்பட்ட ஆண்களின் தாயையும் என்ன செய்வது. பெண் பிள்ளைகளை கண்ணியதோடு நடத்த எந்த ஒரு ஆணும் மாப்பிள்ளையின் பெற்றோர்களும் அந்த காலத்தில் விரும்பியதில்லை. மேலும் கள்ளக்காதல் என்னமோ பெண்கள் மட்டுமே அதுவும் வேலைக்கு போகும் பெண்கள் மட்டுமே மோசமாக நடப்பதாக பதிவிட்டிருப்பது உங்களின் ஆணாதிக்கத்தை காட்டுகிறது. அன்றும் என்றும் தாயிடம் தான் மகன் பிரியமாக இருப்பான்.


Svs Yaadum oore
மார் 13, 2025 10:02

அன்றும் என்றும் தாயிடம் தான் மகன் பிரியமாக இருப்பான்...அது போல அன்றும் இன்றும் எப்போதும் பெற்ற மகளிடம் தீராத பாசத்துடன் இருப்பவன்தான் தகப்பன். ஒரு பிரச்னையை தீர்க்க இன்னொரு பெரிய பிரச்னையை விலைக்கு வாங்கி விட்டோம் என்றுதான் நான் சொல்வது ....


orange தமிழன்
மார் 13, 2025 06:39

இக்காலத்தில் பெரும்பான்மையான பெற்றோர்கள் பிள்ளைகளுடன் படிப்பில் கண்டிப்பு காட்டுவதில்லை...அப்படியே எடுத்து சொன்னாலும் அதை சில பிள்ளைகள் பெரும் சுமையாக நினைப்பதால் இத்தகைய நிகழ்வு.......ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வை எதிர்கொள்ளும் மன நிலையை மாணவர்களுக்கு கற்று தர வேண்டும்.......அதற்கு தகுந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.....


gayathri
மார் 13, 2025 10:38

ஆசிரியர்களை நிறைய மாணவர்கள் மதிப்பதில்லையே சில பெற்றோர்கள் ஒருபடி மேலே சென்று புகார் கொடுத்து ஆசிரியர்களை அலைக்கழித்து அவர்களை மனம் நோக செய்கின்றனர்.


Iyer
மார் 13, 2025 05:42

THE CURRENT EDUCATION SYSTEM & ITS CURRICULUM IS TOTALLY MEANINGLESS, USELESS & PURPOSELESS. யோகா, பிராணாயாமம், த்யானம், சூர்யநமஸ்கரம், இயற்கை விவசாயம் இயற்கை மருத்துவம் போன்ற நம் தமிழர் மற்றும் இந்திய கலைகளை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.


gayathri
மார் 13, 2025 10:40

விவசாயம் பார்ப்பதற்க்கு நாம் தயாரில்லை. எத்தனை பேர் விவசாயத்திற்கு thayaar.


Appa V
மார் 13, 2025 05:29

நங்கள் பள்ளி சென்ற காலங்களில் ஆசிரியரிடம் கண்களை மட்டும் விட்டுவிட்டு பசங்க தோலை உரிக்க பெற்றோர்கள் சொல்வதுண்டு ..இந்த கால பசங்க மொபைல் கையில் வைத்துக்கொண்டு பெற்றோர்களின் நிலைமையை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை


புதிய வீடியோ