உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமரர் ஊர்தி ஏற்பாடு செய்யாததால் மகன்களின் உடலை சுமந்த பெற்றோர்

அமரர் ஊர்தி ஏற்பாடு செய்யாததால் மகன்களின் உடலை சுமந்த பெற்றோர்

கட்சிரோலி, மஹாராஷ்டிராவில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மகன்கள் இறந்த நிலையில், அவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை நிர்வாகம் வாகனம் ஏற்பாடு செய்யாததால், பெற்றோர், 15 கி.மீ., துாரத்துக்கு தோளிலேயே சுமந்து சென்றனர்.மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டம், பட்டிகாவுன் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, 10 வயதில் இரு மகன்கள் இருந்தனர்; இரட்டையர்கள். இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.காய்ச்சல் குணமாகாததால் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை வீட்டுக்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் வாகனம் ஏற்பாடு செய்யவில்லை. தனியாக வாகனம் ஏற்பாடு செய்யும் அளவுக்கு இவர்களிடம் பண வசதியும் இல்லை.இதனால், பெற்றோர் ஆளுக்கு ஒரு சடலத்தை தங்கள் தோளில் போட்டுக்கொண்டு சேறும், சகதியும் நிறைந்த வனப்பகுதி சாலை வழியாக 15 கி.மீ., நடந்தே தங்கள் கிராமத்துக்குச் சென்றனர். இதன் வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.காங்கிரசை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் விஜய் வதேத்திவார், இந்த வீடியோவை சட்டசபையில் நேற்று காட்டி அரசை விமர்சித்தார்.“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் இறந்துள்ளனர். அவர்களின் உடலை எடுத்துச் செல்ல கூட ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யவில்லை.“மழையால் சேதமடைந்த வனப் பகுதி சாலை வழியாக பெற்றோர் தங்கள் மகன்களின் உடலை 15 கி.மீ., துாரம் சுமந்து சென்றுள்ளனர். கட்சிரோலி மாவட்ட சுகாதார அமைப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaran
செப் 09, 2024 21:47

இதே மாதிரி ஒரிஸ்ஸாவிலும் நடந்தது... இதுக்கென்றே ஒரு தனி NGO வேண்டும் ..


aaruthirumalai
செப் 06, 2024 12:56

நாட்டுல இது மிகப்பெரிய பிரச்சினையாக வளர்கிறது. இப்பொழுது சமமான வளர்ச்சிக்காக நமது நாடு ஏங்குகிறது.


Azar Mufeen
செப் 06, 2024 10:28

எந்த கடவுளுக்கும் குழந்தைகளை காப்பாற்ற மனமில்லையோ, கொடிதிலும் கொடிது ஆசையாய் பெற்ற பிள்ளைகளை இறந்த நிலையில் தூக்கி செல்வது


பாமரன்
செப் 06, 2024 09:09

இதுதான் இந்தியாவின் உண்மை முகம்...நடந்திருப்பது இந்தியாவுக்காக அதிக வருவாய் ஈட்டும் மாநிலத்தில்... ஒருங்கிணைந்த வளர்ச்சி வராமல் நாம் மூன்றாவது இடமல்ல முதல் இடத்துக்கு வந்தால் கூட இந்த அவலங்கள் தொடரும்... நம்ம கம்பெனி ஆட்சி செய்து வரும் மாநிலத்தில் நடந்திருப்பதால் ஒளிஞ்சிக்கிட்டு மூக்கு சிந்திகிட்டே கருத்து போட்ட பகோடாஸ் காதில் விழுதா...??


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 06, 2024 09:06

எங்க பிரதமர் சீனாவுக்கு எதிரா வலுவான கூட்டணி அமைச்சுக்கிட்டு இருக்காரு ..... அதுல புரூனே, சிங்கப்பூர் இதுகளையெல்லாம் சேர்த்துக்கிட்டு இருக்காரு .... கொஞ்சம் நிதானமா உங்க பிரச்னைகளையும் கவனிப்பாரு மக்கழே .....


premprakash
செப் 06, 2024 07:12

ரோடு சரியில்ல.. எந்த வண்டிக்காரனும் வரல.. ஏன் அந்த தெருகாரனோ வீடியோ எடுகிறவானோ இரண்டு சக்கர வண்டியில ஆச்சும் கூட்டிட்டு போயிருக்கலாம்....


அப்பாவி
செப் 06, 2024 06:19

ஜந்தன் வங்கி கணக்கு இல்லியா? 55000 கோடி ரூவா வரவு வெச்சிருக்கோமே.


Kasimani Baskaran
செப் 06, 2024 05:32

பணக்கார மாநிலம் - ஆனால் இந்த அடிப்படை மரியாதை கூட இறந்த சிறுவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பது படு சோகமானது. உறவினர்களோ நட்புகளோ கூட இல்லை என்பது இன்னும் சோகமானது. அதை விட சமூக சேவை அமைப்புக்கள் கூட அங்கு இல்லை என்பது இன்னும் சோகமானது.


SANKAR
செப் 06, 2024 04:50

arur rung any comment?


राजा
செப் 06, 2024 03:35

புகைப்படம் எடுத்து செய்தி போட்ட புண்யவான்களே நீங்கள் மனது வைத்திருந்தால் வாகனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கலாமே. எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் உள்ளன அவைகளை நாடி இருக்கலாம். உங்களுக்கு வேண்டியது செய்தி அவ்வளவு தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை