உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ ரயில் ரத்து பயணியர் கடும் அவதி

மெட்ரோ ரயில் ரத்து பயணியர் கடும் அவதி

பெங்களூரு; 'பசுமை வழித்தடத்தில் நாகசந்திரா - மாதவாரா இடையே சிக்கனல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக, ஆக., 20, 23, 30, செப்., 6, 11ம் தேதிகளில், நாகசந்திரா - மாதவாரா வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது' என, பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.பீன்யாவில் இருந்து நாகசந்திராவுக்கு 3 கி.மீ., துாரம் உள்ளது. தினமும் இவ்வழித்தடத்தில் நுாற்றுக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பணிக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.குறிப்பாக, பீன்யா தொழிற்பகுதியில் இருந்து நாகசந்திராவுக்கு ஆட்டோவில் செல்ல, 50 ரூபாய் மட்டுமே ஆகும். ஆனால் தற்போது 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய் என கேட்பதாக, பயணியர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அதேவேளையில், நாகசந்திராவில் இருந்து பீன்யா வரை மெட்ரோ ரயில் இயக்கப்படவில்லை. ஆட்டோ, பஸ்களில் வந்தவர்கள், பீன்யாவில் தங்கள் பணி இடங்களுக்கு செல்ல மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தனர். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ