| ADDED : ஏப் 15, 2024 04:22 AM
பெலகாவி : ''அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை ஒரு 'பெக்' சரக்கு அடிக்க சொல்லவில்லை. 'பெக்' என்றால் எனர்ஜி டிரிங்க்,'' என்று, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் பாட்டீல் கூறி உள்ளார்.பெலகாவியில் பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு துாக்கம் வராது. ஒரு 'பெக்' அடித்தால் துாக்கம் வரும் என்று, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் பாட்டீல் சர்ச்சை கருத்து கூறினார்.இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் சஞ்சய் பாட்டீல் விளக்கம் அளித்து உள்ளார்.அவர் கூறியதாவது:அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, ஒரு 'பெக்' சரக்கு அடிக்கும்படி கூறவில்லை. உடல் புத்துணர்ச்சிக்காக கூடுதலாக, ஒரு 'பெக்' எனர்ஜி டிரிங்க் குடிக்கும்படி கூறினேன். என் மீது தவறு இருந்தால், நடவடிக்கை எடுக்கட்டும். நான் இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளேன். எனது வீட்டின் முன்பு, நேற்று முன்தினம் இரவு, மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தியதால், எனது துாக்கம் போய் விட்டது. அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு, அவரது மகன் மிருணாள் பெலகாவியில் தோற்று விடுவார் என்று, பயம் வந்து விட்டது. இதனால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மகனை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறார்.இவ்வாறு அவர்கூறினார்.