உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேபரேலியில் ராகுல் போட்டி: வயநாடு மக்கள் ஏமாற்றம்

ரேபரேலியில் ராகுல் போட்டி: வயநாடு மக்கள் ஏமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.,யான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், உத்தர பிரதேசதத்தில் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கு வயநாடு தொகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 2019 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த அவர், வயநாட்டில் வெற்றி பெற்றார்.தற்போது நடக்கும் தேர்தலில் அவர் வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த மாதம், 26ல் அந்தத் தொகுதிக்கு தேர்தல் நடந்தது.இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா, பா.ஜ.,வின் மாநிலத் தலைவர் சுரேந்திரன் அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும்படி, கட்சித் தலைமை வலியுறுத்திய நிலையில், தன் தாய் சோனியாவின் ரேபரேலியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இரண்டாவது தொகுதி யில் அவர் போட்டியிடுவது குறித்து, வயநாடு தொகுதி வாக்காளர்கள், கலவையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஒரு சாரார், அது தவறில்லை என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஒருவேளை இரண்டிலும் வென்றால், வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்வார் என்றும், அது சரியல்ல என்றும் தொகுதி மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.கேரளாவில் காங்கிரசின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.குஞ்சாலிகுட்டி, இந்த முடிவை வரவேற்றுள்ளார்.“பிரதமர் மோடி கூட முதல் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது, இண்டியா கூட்டணிக்கு வலு சேர்க்கும்,” என, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Jai
மே 05, 2024 16:50

வயநாடு தொகுதியில் எதிர்த்து நின்ற வேட்பாளர் இந்தியா கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சி வேட்பாளர் தான். இருந்தாலும் தோற்றுவிடுவோம் என்ற ஒரு பயமா?


Thanu Srinivasan
மே 05, 2024 11:16

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்


பேசும் தமிழன்
மே 05, 2024 09:21

பப்புக்கு ... வயநாட்டிலும் புட்டு கொண்டு விடுமோ என்ற பயம் வந்து இருக்கும் ....அதனால் தான் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க இரண்டாவது தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார் ....பப்பு அல்லது மோடி ...யாராக இருந்தாலும் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் ....இரண்டு தொகுதியில் போட்டியிட தடை செய்ய வேண்டும்.....மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டாம்.


shyamnats
மே 05, 2024 08:14

வயநாட்டில் போன முறை தேர்வான பின் இவர் அத்தொகுதிக்கு என்ன சாதித்தார் என்று அம்மக்கள் வருத்த பட போகிறார்கள் சும்மா வெறும் பில்ட் அப் தான்


shyamnats
மே 05, 2024 08:10

தேர்தல் கமிஷன் உடனடியாக, இரு தொகுதிகளில் எந்த வேட்பாளரும் போட்டியிடுவதை தடை செய்ய சட்டம் கொண்டு வந்து நடைமுறை படுத்த வேண்டும் இரண்டிலும் இவர் தோற்று விட்டால் பிரச்சனை இல்லை ஜெயித்தால் மக்கள் வரிப்பணம் வீண் மாற்றாக இரண்டாவது அதிக வாக்குகள் பெற்றவரை அத்தொகுதியில் வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் செய்வார்களா?


Balasubramanian
மே 05, 2024 05:39

இரண்டிலும் ஜெயித்தால் வயநாட்டை ராஜினாமா செய்வார்! சேட்டா சூழ்சிக்கணும்! திரும்பவும் ஒரு முறை ஓட்டு போடணுமா? அதுவும் மத்தியில் ஆட்சியில் வராத காயலாங்கடை காங்கிரசுக்கு?


J.V. Iyer
மே 05, 2024 03:58

இது தேர்தலுக்கு முன்பு தெரிந்திருந்தால் வயநாடு மக்கள் தத்தி ராகுல் கானை ஒருவழி செய்திருப்பார்கள் தத்தி ஒரு பயந்தான்கொள்ளி


தாமரை மலர்கிறது
மே 05, 2024 02:51

வயநாட்டு மக்களை போன்று ரெபெலியில் ராகுல் ஏமாற்றமடைவார் ராமர் கோவிலை கட்டியபின் பிஜேபி நானூற்றி ஐம்பது தொகுதிகளில் ஜெயிக்கும் என்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டு விட்டது தேர்தல் கமிஷன் அறிவிக்கவேண்டியது மட்டுமே பாக்கி ஜூன் நாலாம் தேதி நான்கே நிமிடத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் காற்றுபுடுங்கப்பட்ட பலூன் போன்று அல்லது இஞ்சி தின்ன குரங்கு போன்று கம்மென்று ஆகிவிடுவார்கள் அதுவரை ஆடுடா ராஜா ஆடுடா


A1Suresh
மே 05, 2024 01:39

பப்புவை செஸ் விளையாட்டில் வித்தகன் என்றார் ஜெய்ராம் ரமேஷ் நான் ஒரு சவால் விடுகிறேன் எங்கள் சுடாலினுடன் செஸ் விளையாட்டில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை