யாத்திரை சென்ற தம்பதி, 2 மகள் மாயம்
பல்லாரி: அஜ்மீருக்கு புனித யாத்திரை சென்ற பல்லாரியை சேர்ந்த தம்பதி, இரண்டு மகள்கள் மாயமாகி உள்ளனர்.பல்லாரி டவுன் ஜெயநகரை சேர்ந்தவர் நசீர் அகமது, 50. தொழில் அதிபர். இவரது மனைவி முனியார் ரோகியா, 47. மகள்கள் சானியா, 21, அஞ்சும், 15. கடந்த மாதம் 6ம் தேதி மனைவி, மகள்களுடன், நசீர் அகமது ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீருக்கு புனித யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்றார்.யாத்திரை முடிந்து இன்னும் வீடு திரும்பவில்லை. நான்கு பேரின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளன. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. குடும்பத்தினர் பீதி அடைந்துள்ளனர். கவுல் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.