உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிஷப்பை விமர்சித்த பினராயி : கிறிஸ்துவர்கள் கடும் எதிர்ப்பு

பிஷப்பை விமர்சித்த பினராயி : கிறிஸ்துவர்கள் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் :லோக்சபா தேர்தலில் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளில், ஒரு தொகுதியில் மட்டுமே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் தோல்வி

இது குறித்து கேரளாவின் யாக்கோப்படை சிரியன் திருச்சபையின் முன்னாள் பிஷப் கீ வர்கீஸ் கூரிலோஸ் கருத்து தெரிவிக்கையில், 'தேர்தல் தோல்வியிலிருந்து கம்யூனிஸ்டுகள் பாடம் கற்க வேண்டும். 'இல்லாவிட்டால் மேற்கு வங்கம், திரிபுராவில் ஏற்பட்ட நிலை கட்சிக்கு ஏற்படும்.

விமர்சனம்

'கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் திறம்பட செயலாற்றியதால் தான் இடது சாரி முன்னணி 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எப்போதும் வெள்ளம், தொற்று நோய்கள் உதவ முடியாது' என்றார்.இதுபற்றி முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ''பிஷப்பின் அறிக்கையை பார்த்தேன். இதிலிருந்து பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது,'' என்றார், கிண்டலாக.முதல்வரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கேரள எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசின் சதீசன் கூறுகையில், “பினராயி விஜயன் விமர்சனங்களை சகித்துக் கொள்ள வேண்டும். அவர் தன் கட்சிக்குள் அல்லது வெளியே எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

முனைவர் இரவி வெங்கட்ரமணன்
ஜூன் 12, 2024 22:26

மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா போன்று கேரளமும் மாறும்!


SARAVANAN A
ஜூன் 12, 2024 13:50

மதத்தின் பெயரால் ஏமாற்றும் எத்தர்கள் யார். வெறும் வாக்கு வங்கி ஆதாயத்திற்காக அவர்களுக்கு துணை போகும் போலி மதவாத அரசியல்வாதிகள் யார் என்பதையெல்லாம் மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பா அரசியலை சர்ச்கள் கட்டுப்படுத்திய வரலாற்று தவறுகள் இன்றளவும் இந்தியாவில் தெடர்வது காலக் கொடுமை


தமிழ்வேள்
ஜூன் 12, 2024 12:47

இன்று இப்படி பேசும் பினாராயி, ஏன் பிராங்கோ முல்லக்கல்லுக்கு தண்டனை வழங்க முயற்சி எடுக்கவில்லை? உடல் மட்டுமே என்னுடையது ..உள்ளிருந்து கேவலமான செயலுக்கு இயக்கம் அளித்தது ஏசு என்று கூசாமல் சொன்னவனை, கோர்ட்டும், வாட்டிகனும் கூட தவறு சொல்லவில்லை. மாறாக விடுதலை செய்தார்கள் ..குற்றத்தை ஒப்பு கொண்டவனை விடுதலை செய்த ஒரே கோர்ட்டு நம்முடையதுதான்


ram
ஜூன் 12, 2024 11:13

கிறிஸ்டின் அண்ட் முஸ்லீம் சேர்ந்து காங்கிரஸுக்கு வோட்டு போட்டு ஜெயிக்க விட்டார்கள் இப்போது குத்துது கொடையது என்றால், அவர்களை உங்கள் மாநிலத்தில் வளர்த்துவிட்ட பொது உங்கள் புத்தி எங்கே போனது. இதுவும் காங்கிரஸ் டெம்போரரி தான் அவர்கள் ஐம்பது சதவீதத்துக்கு மேல் போனால் அவர்கள் ஆட்கள் தான் அங்கு முதல் மந்திரி. இது இங்கு ஆட்சி செய்யும் திருட்டு திமுகவுக்கும் பொருந்தும்.


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 11:11

இது போல் முஸ்லிம் மதத்தலைவர்களை கண்டிக்க மாட்டார்.


Muralidharan raghavan
ஜூன் 12, 2024 11:10

வாக்கு வங்கிக்காக என்னதான் தாஜா செய்தாலும் அவர்களை முறைத்துக்கொண்டால் இதுதான் நிலைமை


duruvasar
ஜூன் 12, 2024 09:31

கேரளாவின் ஒரே ஒரு புத்திமானான பினராயியை தவிர மற்ற அனைவருமே முட்டாள்கள் தான்.


Duruvesan
ஜூன் 12, 2024 08:46

பாஸ் நீ ஹிந்து, ஹிந்து கடவுளை என்ன வேணா திட்டு, ஆனால் அதுவே ...ய திட்டிட்டே இண்டி கூட்டணி கொந்தளிச்சிடும்


பேசும் தமிழன்
ஜூன் 12, 2024 07:38

நீங்கள் ஏன் தோல்வி அடைந்தீர்கள் என்று சொன்ன குழந்தைக்கு கூட தெரியும் ....நாட்டில் கான் கிராஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு....இங்கே கான் கிராஸ் கட்சியை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டு ....மக்களை முட்டாளாக்க நினைத்ததன் பயன் தான் இந்த தோல்வி.


Kasimani Baskaran
ஜூன் 12, 2024 06:59

பிஷப் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா. பாலியல் தொல்லை கொடுத்தால் கூட அவர்களைப்பற்றி விமர்சிக்கக்கூடாது என்று கூட சொல்ல அடிமைகள் இருக்கும் பொழுது இதெல்லாம் சாதாரணம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி