உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் மத்திய அமைச்சர் வரவேற்பு

தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் மத்திய அமைச்சர் வரவேற்பு

விஜயநகர்: ''என் மீதுள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால், திருத்தி கொள்வேன்,'' என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.பெங்களூரு விஜயநகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:இன்று முதல் லோக்சபா கூட்டம் துவங்குகிறது. 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், அடுத்த தலைமுறையினருக்காகவும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாட்டின் எதிர்கால நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட் அமையும்.பா.ஜ., ஆட்சியில் 21 முறைகேடுகள் குறித்து முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார். உங்கள் மீது இருக்கும் தவறை நியாயப்படுத்த வேண்டாம். எனக்கு பழைய சித்தராமையா தான் வேண்டும். பழைய சித்தராமையாவாக இருந்து, என் மீதுள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால், திருத்தி கொள்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ