உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் அரசாங்கத்தை அமைக்க புது கட்சி துவக்கினார் பிரசாந்த் கிஷோர்

மக்கள் அரசாங்கத்தை அமைக்க புது கட்சி துவக்கினார் பிரசாந்த் கிஷோர்

புதுடில்லி : பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வியூகங்களை வகுத்து தந்த தேர்தல் மன்னன் பிரசாந்த் கிஷோர் மக்கள் அரசாங்கத்தை அமைக்க புது கட்சி ஒன்றை துவக்கி உள்ளார். பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அம் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அந்ததேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை துவக்கி உள்ளார். தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் பேசுகையி்ல் அவர் கூறியதாவது: புதிய கட்சி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி துவங்கப்படும். தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும் எனவும் முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும் என்றார். இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது என்று அவர் கூறினார். இது பீகார் மக்களின் கூட்டு முயற்சியாக இருக்கும்.புதிய கட்சியின் நிர்வாகிகளாக 1.5 லட்சம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.தான் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என்றும், தலைவர்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.மேலும் கட்சியின் தலைமை ஐந்து சமூகக் குழுக்களிடையே ஒப்படைக்கப்படும் என்றும், பொதுப் பிரிவை சேர்ந்த ஒரு தலைவர் ஓராண்டு பதவியில் இருப்பார்.அதைத் தொடர்ந்து ஓபிசியில் இருந்து ஒரு தலைவர் மற்றொரு வருடம் பதவி வகிப்பார் என்று கிஷோர் கூறினார்.இதனையடுத்து 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் 8 இடங்களில் மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Azar Mufeen
ஜூலை 29, 2024 12:54

கிழிஞ்சது போ திருட்டு பணம் எப்படி வேலை செய்கிறது


ராமகிருஷ்ணன்
ஜூலை 29, 2024 05:36

திமுக ஆட்சி அமைக்க உதவிய மாபெரும் பாவம் ஒன்றே இவரை அழித்து விடும். இவருடைய வேற எந்த புண்ணியங்களும் கணக்கில் வராத அளவுக்கு பாவம் செய்து விட்டார்.


Sankar Ramu
ஜூலை 29, 2024 00:37

பெட்டி வாங்க உதவும்.


sankaranarayanan
ஜூலை 28, 2024 23:35

சமபாதிச்சுவைச்ச பல்லாயிரம் கோடிகள் செலவு செய்ய வேண்டாமா ஆன்னடைவானா பார்த்து செலவு செய்ய செய்த இது ஒரு வழி


RAJ
ஜூலை 28, 2024 22:49

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்


S. Narayanan
ஜூலை 28, 2024 22:22

வாழ்த்துக்கள் எல்லா தரப்பு மக்களையும் சாதி மத வேறுபாடின்றி மதிக்கும் கொள்கை முதல் நாள் ஆரம்பித்து கடைசி வரை தொடர்ந்தால் மக்கள் ஆதரவு அளிப்பர். இலவசம் என்ற வியாதியை பரவ விட கூடாது கிஷோர் அவர்களே


Bala
ஜூலை 28, 2024 22:16

கிழிஞ்சது போ, திராவிடியத் திருட்டுப் பணம் எப்படி வேலை செய்யுது?


Nathansamwi
ஜூலை 28, 2024 22:14

Good initiative by p.kishore...we need the new people into the politics... congratulations and best wishes from TN..


Ramesh Sargam
ஜூலை 28, 2024 21:28

தேர்தலில் தனியாக போட்டியிடுவீர்களா? அல்லது யாருடனாவது கூட்டு இருக்குமா?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 21:24

பீகாருக்கு வெளியே செல்வாக்கில்லை .........


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி