மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு இந்தாண்டு ஸ்பெஷல்!
01-Sep-2024
பிடதி: மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் குமாரசாமி, ராம்நகர், பிடதியின், கேதகானஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டுக்கு வருகை தந்தார். மனைவி அனிதா, மகன் நிகில், மருமகள், பேரன் என, குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.பெங்களூரின், ஜே.பி., நகர் இல்லத்திலும் விநாயகருக்கு பூஜைகள் நடந்தன. மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக் கூறினர். 'முழு முதற் கடவுள் விநாயகர், நாட்டு மக்களின் கஷ்டங்களை போக்கி, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சியை அளிக்க வேண்டும்' என, விநாயகரிடம் குமாரசாமி வேண்டினார்.முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், 'எக்ஸ்' வலை தளம் மூலமாக, மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறினார்.
01-Sep-2024