வயநாடு:வயநாடு நிலச்சரிவில் வீடிழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். சேதங்களை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த அவர், கேரள அரசுக்கு அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதி அளித்தார்.கேரளாவின் வயநாட்டில், ஜூலை 30ம் தேதி கனமழையுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டக்கை பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதுவரை, 225 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்; 130 பேரை காணவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=55a3djae&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யவும், வீட்டையும், குடும்பத்தினரையும் பறி கொடுத்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், மோடி நேற்று கேரளா வந்தார். தனி விமானத்தில் கண்ணுார் வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். நிலச்சரிவு சேதங்களை ஆய்வு செய்தார்.கல்பேட்டா பகுதியில் இறங்கி, சாலை மார்க்கமாக சூரல்மலைக்கு பிரதமர் சென்றார். அங்கு ராணுவத்தால் கட்டப்பட்ட, 190 அடி நீள பெய்லி பாலத்தை அவர் ஆய்வு செய்தார். வீடுகளை மண் மூடிய பகுதிக்கு நடந்து சென்று பார்வையிட்டார்.மேப்படி என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு சென்ற மோடி, அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். என்ன நடந்தது? எப்படி நடந்தது என்று, அவர்கள் விவரித்ததை கேட்டார்.தாய், தந்தை உட்பட அனைத்து உறவுகளையும் இழந்த இரண்டு சிறுவர்களை ஆதரவாக அணைத்து ஆறுதல் கூறினார்.டாக்டர் மூப்பன் மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து, விரைவில் குணமடைய வாழ்த்தினார். பின், கல்பேட்டா திரும்பிய அவர், ஹெலிகாப்டர் வாயிலாக கண்ணுார் சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிவாரண ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.''பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய போது, அவர்களின் வலியை நான் உணர்ந்தேன். இயற்கை சீற்றம், பல ஆயிரம் குடும்பங்களின் கனவுகளை சீரழித்துள்ளது.''இதிலிருந்து அவர்கள் மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை. மீட்பு மற்றும் மறுகுடியமர்வு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்,” என்று, அக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.Gallery
உடனடி உதவிகள்
மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: நிலச்சரிவு தகவல் கிடைத்த உடனே முப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட மத்திய அமைப்புகளைச் சேர்ந்த, 1,200 பேர் கேரளாவுக்கு அனுப்பப்பட்டனர். டாக்டர்கள் மற்றும் உதவியாளர்களுடன், 100 ஆம்புலன்ஸ்களும் விரைந்தன. மீட்பு பணிக்காக, 190 அடி நீள பெய்லி பாலம் ராணுவத்தால் 71 மணி நேரத்துக்குள் கட்டப்பட்டது.பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகள் வழங்க, பல்துறை அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அமைத்தது. ஏப்ரல், 1 நிலவரப்படி, கேரள மாநில பேரிடர் மீட்பு நிதியில், 395 கோடி ரூபாய் இருந்தது. நடப்பு நிதியாண்டுக்கான முதல் தவணையான, 145 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரளாவுக்கு, 1,200 கோடி ரூபாய் மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு கூறினர்.
'நம்பிக்கை வந்துள்ளது'
முண்டக்கை பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், தன் குடும்பத்தினர் ஒன்பது பேரை இழந்துள்ளார். அவருடைய வீடும் நிலச்சரிவில் புதைந்தது. முகாமில் தங்கியுள்ள அய்யப்பன், பிரதமர் மோடியிடம் பேசியது குறித்து விவரித்தார்.''அனைத்தையும் இழந்து விட்டேன் என்பதை பிரதமரிடம் சொன்னேன். அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்வதாக அவர் உறுதி அளித்தார். இந்த துயரத்திலும் அவருடைய ஆறுதல், நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.ஓய்வின்றி சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சார்லி, ''இவர்களுக்கு உடல் காயத்தை விட, மன பாதிப்பே அதிகம். வீடு, குடும்பம், உறவு, வாழ்வாதாரம் என அனைத்தையும் பறிகொடுத்ததால் மனம் நொறுங்கிய நிலையில் உள்ளனர். மீண்டு வர எங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறோம்,'' என்று மோடியிடம் விளக்கினார்.