மேலும் செய்திகள்
டிச., 20ல் மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி பயணம்
7 hour(s) ago
''பெண்களுக்கு எதிராக குற்றங்கள் புரியும் பிரஜ்வல் ரேவண்ணா போன்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,'' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடக மாநிலம், ஹாசன் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.,யான பிரஜ்வல் ரேவண்ணா, 33 இந்த முறை பா.ஜ., கூட்டணியில் அதே தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். சமீபத்தில் இவரது நுாற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் பல பெண்களை மிரட்டி பிரஜ்வல் பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சியான பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. இது குறித்து, பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போது வெளியாகியுள்ள பெண்களின் நுாற்றுக்கணக்கான வீடியோக்கள், கர்நாடகாவில் காங்கிரஸ் -- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்டவை என்பதை உணர்த்துகின்றன.கர்நாடகாவை ஆளும், முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அரசுக்கு இது பற்றி தகவல் தெரிந்திருந்தால், பிரஜ்வல் வெளிநாடு செல்லும் முன், விமான நிலையத்தில் கண்காணிப்பை பலப்படுத்தி இருக்க வேண்டும். மத்திய அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். இது என்னுடைய பிரச்னை இல்லை. ஆனால், எந்தக் குற்றவாளியும் தப்பக்கூடாது. இப்போது அதுவே பிரச்னை. பிரஜ்வல் போன்ற நபர்களை பா.ஜ., சகித்துக் கொள்ளாது. இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். - - நமது நிருபர் -
7 hour(s) ago