மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
ஜனக்புரி:திஹார் சிறையில் நேற்று முன்தினம் நடந்த கோஷ்டி மோதலில் ஒரு கைதிக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் சிலர் சிறு காயமடைந்தனர்.திஹார் சிறைக்குள் தில்லு தாஜ்பூரியா மற்றும் கோகி என இரு கோஷ்டிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் காலை 11:15 மணி அளவில் திடீரென மோதல் வெடித்தது.அப்போது, ஹிதேஷ் என்ற கைதிக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் படுகாயமடைந்தார். கொலை வழக்கில் கைதாகி, விசாரணைக்கைதியாக அவர் இங்கு அடைக்கப்பட்டுள்ளார்.படுகாயமடைந்த அவர், தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதலில் மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிறையில் உள்ள சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த மோதல் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கோஷ்டி மோதல் நடந்த சிறை எண்: 3ல் வி.ஐ.பி., தலைவர்கள் யாரும் அடைக்கப்படவில்லை என, சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
4 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago | 2