உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எடியூரப்பா கைதுக்கு தடை; செப்., 5 வரை நீட்டிப்பு

எடியூரப்பா கைதுக்கு தடை; செப்., 5 வரை நீட்டிப்பு

பெங்களூரு : கர்நாடக பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 81. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவர் மீது பெங்களூரு சதாசிவநகர் போலீசார், 'போக்சோ' வழக்குப் பதிவு செய்தனர்.நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத்தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார். நேற்று மனு மீது விசாரணை நடந்தது.எடியூரப்பா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாகேஷ் வாதாடுகையில், ''கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும், என் மனுதாரரை போக்சோ குற்றவாளி என்கின்றனர். அவர் கைது செய்யப்படுவார் என கூறுகின்றனர். இப்படி கூறுவோர் நீதிமன்றத்திற்கு வந்து வாதாடட்டும். எனது மனுதாரரின் தலைவிதி சரியாக இல்லை என்றால் அவர் சிறைக்கு செல்வார்,'' என்றார்.அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வக்கீல் அசோக் நாயக், ''நாங்களும் வாதாட தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சிறிது அவகாசம் தேவை,'' என்றார்.இதனால் கோபம் அடைந்த நாகேஷ், “நீங்கள் ரெடி என்றால், நானும் இப்போது தயார்,” என உரத்த குரலில் கூறினார். இதற்கு அசோக் நாயக், “மனுதாரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் நகலை சமர்ப்பிக்க அவகாசம் தேவை,” என்று கூறினார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாகபிரசன்னா, மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை எடியூரப்பாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையையும் நீட்டித்துஉத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி