உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீண்டு கொண்டே போகும் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல்: ஆக. 20 வரை நீட்டிப்பு

நீண்டு கொண்டே போகும் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல்: ஆக. 20 வரை நீட்டிப்பு

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மீதான நீதிமன்ற காவல் ஆக.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முக்கிய குற்றவாளியாக டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்வால் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.இதில் நடந்துள்ள பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 26-ம் தேதி திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கைது செய்தது. இது தொடர்பான வழக்குகள் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வரும் ஆக.20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SP
ஆக 08, 2024 23:33

முதல்வர்பதவியிலிருந்து முதலில் நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இந்த நபரால் நமது மானம் போகிறது.


தாமரை மலர்கிறது
ஆக 08, 2024 22:47

இவரை வெளியே விட்டால், டெல்லியில் ஊழல் பெருகிவிடும். பிஜேபி மத்தியில் இருக்கும் வரை, கெஜ்ரி வெளியே வரமுடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிஜேபி தான் இந்தியாவை ஆளும். அதுவரை கெஜ்ரி உயிர் வாழபோவதில்லை.


Ramesh Sargam
ஆக 08, 2024 22:13

ஏண்டாப்பா அரசியலுக்கு வந்தோம் என்று நினைப்பார் கெஜ்ரி. பேசாம அண்ணா ஹசாரி கூட சேர்ந்து உண்ணாவிரதத்தோடு முடித்துக்கொண்டிருக்கலாம். அரசியல் ஆசை. இப்பொழுது பூசை.


r ravichandran
ஆக 08, 2024 21:47

என்ன செய்வது, உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.


Indhuindian
ஆக 08, 2024 20:55

விடாது கருப்பு துரத்தூ தூரதொன்னு துரத்தும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை