மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
59 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
புதுடில்லி:தென்மேற்கு டில்லி வசந்த் குஞ்ச் ஹோட்டலில், நண்பரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பஞ்சாபைச் சேர்ந்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.பஞ்சாப் மாநிலம் ரூப் நகரைச் சேர்ந்தவர் மன்தீப் சிங்,32. இவரது நண்பர் ரோஹித்,28. கடந்த 4ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு டில்லி வசந்த் குஞ்ச்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இருவரும் காரில் வந்தனர். அறை எடுத்து தங்கினர். அதிகாலை 3:20 மணிக்கு மன்தீப் சிங் மட்டும் புறப்பட்டுச் சென்றார்.மறுநாள் காலை அறைகளை சுத்தம் செய்யச் சென்ற ஹோட்டல் ஊழியர்கள், ஒரு அறை திறந்து கிடப்பதைப் பார்த்து உள்ளே சென்றனர்.குளியலறையில் ரோஹித் இறந்து கிடந்தார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வசந்த் குஞ்ச் போலீசார் விரைந்து வந்து, ரோஹித் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மன்தீப் சிங்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் கொடுத்திருந்த மொபைல் போன் எண்ணைக் கண்கானித்து, ஒரு குழு சண்டிகரில் தேடுதல் வேட்டை நடத்தியது. மேலும், விமான நிலையத்துக்கும் மன்தீப் சிங் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ரோஹித்தின் வங்கி ஏ.டி.எம்., அடையாள அட்டையை பயன்படுத்தி கரோல் பாக்கில் உள்ள ஒரு மையத்தில் மன்தீப் பணம் எடுத்தார். அதற்கான மெசேஜ் போலீசிடம் இருந்த அவரது மொபைல் போனுக்கு வந்தது. இதையடுத்து, கரோல் பாக்கில் சல்லடை போட்டு தேடிய போலீசார், மன்தீப் சிங்கை நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், ரோஹித்தின் பணப்பை மற்றும் ஆடைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து, துணை கமிஷனர் ரோஹித் மீனா கூறியதாவது:பஞ்சாபின் ரூப் நகரில் இருந்து டில்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கி விட ரோஹித்தும் மன்தீப்சிங் ஆகிய இருவரும் வந்துள்ளனர். பயணியை இறக்கி விட்டபின், மிகவும் சோர்வாக இருந்ததால் ஹோட்டலில் அறை எடுத்து ஓய்வெடுத்துள்ளனர். ஆனால், அறையில் இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ரோஹித் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மன்தீப் கார், பணப்பை மற்றும் ரோஹித்தின் உடைமைகளை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். . ரோஹித் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியதால் பிடிபட்டார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
59 minutes ago
1 hour(s) ago