உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிர கவர்னராக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

மஹாராஷ்டிர கவர்னராக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

மும்பை,மஹாராஷ்டிர கவர்னராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். தமிழத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக, கடந்த 2023 பிப்., 18ல் பொறுப்பேற்றார்.ஒன்றரை ஆண்டாக இந்த பதவியில் நீடித்து வந்த அவர் தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் கூடுதலாக பதவி வகித்தார்.இந்த நிலையில் அவரை மஹாராஷ்ர மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மாலை, அவர் மஹாராஷ்டிரா கவர்னராக பதவியேற்றுக் கொண்டார்.மும்பை கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், ராதாகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் மற்றும் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி