மேலும் செய்திகள்
கவாய் மீதான தாக்குதல் இந்தியரை கோபப்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி
2 hour(s) ago | 4
சுல்தான்பூர்:லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல், அவதூறு வழக்கில் உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை ராகுல் கூறியதாக சுல்தான்பூர் பா.ஜ., தலைவர் விஜய் மிஸ்ரா 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 4ல், ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபம் வர்மா முன், ராகுல் நேற்று ஆஜரானார். விசாரணை நடத்திய நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.இதுகுறித்து, ராகுலின் வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா, “அவதூறு ஏற்படுத்தும் வகையில் யாருக்கு எதிராகவும் ராகுல் அறிக்கை வெளியிடவில்லை, இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் நீதிமன்றத்தில் ராகுல் மீண்டும் ஆஜராக வேண்டியதில்லை,”என்றார்.வழக்கு தொடுத்த விஜய் மிஸ்ரா சார்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ் குமார் பாண்டே, “ராகுல் வாக்குமூலத்தை நீதிபதி நேற்று பதிவு செய்துள்ளார். அடுத்த விசாரணையின் போது, சாட்சியம் சமர்ப்பிக்கப்படும்,”என்றார்.கடந்த பிப்ரவரி 20ம் தேதி உ.பி., மாநிலம் அமேதியில் ராகுல் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' சென்றபோது, நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமின் வழங்கியது.ராகுல் வருவதை முன்னிட்டு, நீதிமன்றம் அருகே காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. ரேபரேலியில் இருந்து விமானத்தில் லக்னோ வந்த ராகுல், அங்கிருந்து காரில் சுல்தான்பூர் வந்தார்.
2 hour(s) ago | 4