உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உண்டியலில் புகுந்த மழை நீர்

உண்டியலில் புகுந்த மழை நீர்

கோலார் : கோலார், முல்பாகலில் உள்ள குருடுமலே கணபதி கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகளுக்கு பிடித்தமான கோவிலாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசிக்கின்றனர்.கோலார் மாவட்டத்தில், சில நாட்களாக மழை பெய்கிறது. பல இடங்களில் கோவில்களை, வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதே போன்று குருடுமலே கணபதி கோவிலுக்குள் நீர் புகுந்துள்ளது. கூரை ஒழுகி, காணிக்கை உண்டியலில் மழை நீர் விழுந்ததில், பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணம் நனைந்தது.அறநிலையத் துறை ஊழியர்கள், உண்டியலை திறந்து ரூபாய் நோட்டுகளை வெயிலில் உலர்த்தியுள்ளனர். கோவிலின் கூரையை பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ