உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் இந்தியாவின் அடித்தளம்: பிரதமர் மோடி ராமநவமி வாழ்த்து

ராமர் இந்தியாவின் அடித்தளம்: பிரதமர் மோடி ராமநவமி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராமர் இந்தியாவின் நம்பிக்கை மற்றும் அடித்தளம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமி இந்த ஆண்டு இன்று (ஏப்ரல்17) கொண்டாடப்படுகிறது. ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது. இது கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள். ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருந்து கொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும். ராமர் இந்தியாவின் நம்பிக்கை. ராமர் இந்தியாவின் அடித்தளம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஏப் 17, 2024 17:35

ராமநவமி வாழ்த்துகள்


Nallavan
ஏப் 17, 2024 12:51

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அடித்தளம் ராணுவமா, ராமரா?


Sureshkumar
ஏப் 17, 2024 11:32

ஜெய் ஸ்ரீ ராம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை