உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லிப்ட் கொடுத்து பலாத்கார முயற்சி: தப்பியோடிய தமிழக வாலிபர் கைது

லிப்ட் கொடுத்து பலாத்கார முயற்சி: தப்பியோடிய தமிழக வாலிபர் கைது

பெங்களூரு:பெங்களூரில், கல்லுாரி மாணவிக்கு, 'லிப்ட்' கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சித்த தமிழகத்தைச் சேர்ந்த, நடன ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவை சேர்ந்த 21 வயது இளம்பெண், பெங்களூரில் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் கோரமங்களாவில் உள்ள, 'பப்' ஒன்றில் நடந்த பார்ட்டியில் பங்கேற்றார். பார்ட்டி முடிந்த பின், இளம்பெண் காரை ஓட்டினார். போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, சாலை ஓரத்தில் நின்றிருந்த ஆட்டோக்கள் மீது மோதினார். பீதியடைந்த அப்பெண், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின், தன்னை கைது செய்து விடுவரோ என்று பயந்து, காரில் இருந்து இறங்கி, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டியிடம், 'லிப்ட்' கேட்டு சென்றார்.இதற்கிடையில், பெண்களுக்கு ஆபத்தில் உதவும் செயலியை ஆன் செய்து, தனது தந்தை, தோழிக்கு அப்பெண், தகவல் கொடுத்துள்ளார்.

பைக்கில் 'லிப்ட்'

லிப்ட் கொடுத்த மர்ம நபர், ஹெப்பகோடி என்ற இடத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று, ஷெட்டில்அடைத்து, பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.அதற்குள் போலீசார், தோழியின் நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். இதை பார்த்த மர்ம நபர், அங்கிருந்து தப்பியோடி விட்டார். சம்பவம் குறித்து, பெங்களூரு கிழக்கு மண்டல ஏ.சி.பி., ராமன் குப்தா விசாரித்து வந்தார். இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை, போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக, தென்கிழக்கு டி.சி.பி., சாரா பாத்திமா நேற்று அளித்த பேட்டி:பிடிபட்டவர், தமிழகத்தைச் சேர்ந்த முகேஸ்வரன், 24, என்பது தெரிய வந்துள்ளது. இவர், 2003 முதல் பெற்றோருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். தற்போது நடன பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது எந்த கிரிமினல் புகாரும் இல்லை.சம்பவ தினத்தன்று, முகேஸ்வரன், தனது நண்பர்களுடன் கோரமங்களாவில் உள்ள ஒரு பப்பில் மது அருந்தி உள்ளார். வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தான், இளம் பெண் லிப்ட் கேட்டுள்ளார்.போதையில் இருந்த அவர், அப்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதற்குள் இளம்பெண்ணின் நண்பர்கள் வருவதை பார்த்து, தப்பியோடி விட்டார்.பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியின் மூலம் குற்றவாளியை பிடித்துள்ளோம். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ